Gold Silver Rate Today Chennai Dec 14: சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 529க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 232க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் கிராமிற்கு இன்று 3 ரூபாய் உயர்ந்து கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 558க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 24 உயர்ந்து சவரனுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 304க்கு விற்கப்படுகிறது.


அதேபோல, 24 காரட் 4 ஆயிரத்து 895க்கு விற்கப்படுகிறது. ரூபாய் 39 ஆயிரத்து 160க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 10 காசுகள் குறைந்து ரூபாய் 65.20க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.




முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.



மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே முதலீட்டாளர்கள் விரும்புவார்கள்.  



 

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.