Kalaignar 100 LIVE: நவீன திரைப்படம் நகரம் - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Kalaignar 100 Function LIVE Updates: கலைஞரைப் போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 22.500 இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கலைஞர் 100 விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் திரைப்பட நகரம், புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனைத்து வசதிகள், 5 ஸ்டார் ஹோட்டல் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கலைஞர் கருணாநிதி என கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி பேசி வருகின்றார்.
கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவை வசனம் வசப்படுத்தியவர் கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று அவரிடம் கற்றதால்தான் பிக்பாஸ் மூலம் மக்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என கலைஞர் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கலைஞருக்கு எந்த விழா எடுத்தாலும் வரிச்சலுகை, வரி விலக்கு என்று ஏதாவது ஒரு எதிர்பார்ப்புடனே விழா எடுக்கப்படும். ஆனால் இந்த விழா அவர் செய்த உதவிகளுக்கான நன்றிகளுக்கான தொகுப்பு விழா என கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
என்னுடைய நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திய அரசியல் பண்புக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன் முதல்வரின் இந்த பண்பு எங்கிருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் இந்த வணக்கம் கலைஞருக்கும் உறுத்தானதுதான் என கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசுகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் எனது தமிழ் அசான்கள் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா மேடையில் பேசிய கமல்ஹாசன் மேடையின் ஒரு ஒரத்தில் நின்று பேசினார். அப்போது அவர் பேச்சினை தொடங்கும்போது, “ என்னடா ஒரு ஓரமா நின்னு பேசறேன்னு நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாத்தான் இருப்பேன் என பேசி தனது பேச்சினை தொடங்கினார். இதற்கு அனைவரும் கரகோசம் எழுப்பினர்.
எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதலமைச்சருக்கு நன்றி என கலைஞர் 100 விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கலைஞரையும் தமிழையும் கலைஞரையும் சினிமாவையும் கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகின்றார்.
கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் மிசா காட்சிகளை கலைஞராக தம்பி ராமையாவும் ஸ்டாலினாக விதார்த்தும் நடித்ததைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கண் கலங்கியுள்ளார்.
பராசக்தி படத்தில் கை ரிக்சா இழுப்பவரை பற்றி ஒரு காட்சி அமைந்திருக்கும். நீ வேணா ஆட்சிக்கு வந்து இந்த முறையை மாத்து சிவாஜி சாரை பார்த்து ஒரு கதாபாத்திரம் பேசும். சொன்ன மாதிரியே 17 ஆண்டுகளுப்பிறகு ஆட்சிக்கு வந்து கை ரிக்சா முறையை ஒழித்தார் கலைஞர் என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
கலைஞர் அரசியலுக்காக அர்ப்பணித்த வருடங்களுக்கு ஈடாக கலைக்கு அர்ப்பணித்த வருடங்களையும் முக்கியமானதாக பார்க்கிறேன். சினிமா என்பது ஒரு ஆயுதம். அதனை நல்வழியில் பேசினால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என செய்து காட்டியவர் கலைஞர். கலைஞர் முதலில் ஒரு படைப்பாளி. இந்த கலைஞர் நூற்றாண்டு விழா மிக முக்கியமானதாக பார்க்கிறேன்
பார்வையாளர்களுக்கு போதுமான எல்.இ.டி திரைகள் இல்லாததால் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால் சிலர் விழாவில் இருந்து திரும்பியுள்ளனர்.
கலையை அரசியலாகவும் அரசியலை கலையாகவும் பார்த்தவர் கலைஞர். நான் அவரை நேரில் பார்த்திருக்கின்றேன், அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியிருக்கின்றேன் என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
கலைஞர் ஒரு படைப்பாளி. கலைஞருக்கும் அவரது எழுதுகோலுக்கும் எனது மரியாதைகள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
அரசியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்த போது சினிமாவையும் ஒருசேர கொண்டுவந்தவர் கலைஞர் என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
பராசக்தி படத்தில் நீ வேணும் என்றால் ஆட்சிக்கு வந்து மாத்திகாட்டேன் என எழுதி இருப்பார். அதேபோல் முதலமைச்சராக அமர்ந்து தான் எழுதியதை செய்துகாட்டியவர் கலைஞர் என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி என்னை மன்மதராசா என அழைத்தார் என தனுஷ் பேசியுள்ளார்.
கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது என தனுஷ் பேசியுள்ளார்.
அசுரன் படம் பார்த்துவிட்டு முதலமைச்சர் என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது, பிரதர் நான் ஸ்டாலின் பேசறேன் என கூறினார். இன்றைக்கு நமக்கு உள்ள முதலமைச்சர் எளிதில் அணுகும்படியாக உள்ளார். மக்களின் முதலமைச்சராக உள்ளார்.
கலைஞர் 100 விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருக்கு அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பினர்.
கலைஞர் 100 விழாவுக்கு வருகை தந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அரங்கம் அதிர உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன் நண்பர் ரஜினிகாந்துடன் உற்சாகமாக கைகுலுக்கிய கமல்ஹாசனின் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
கலைஞர் 100 விழாவுக்கு வருகை தந்த நடிகர் சூர்யா "கலைஞர் அரசியலில் பல மாற்றங்களை எடுத்து வந்ததுடன் சினிமாவையும் கைவிடாமல் கூடவே எடுத்து வந்துள்ளார். அதனால் தான் அவரை கலைஞர் என்று கூறுகிறோம். முதலில் அவர் படைப்பாளி. இந்த விழாவை நான் முக்கியமான விழாவாக பார்க்கிறேன்.” எனப் பேசியுள்ளார்.
நடிகை நயன்தாரா தனது பவுண்சர்களை வண்டியில் ஏற்ற அனுமதிக்காததற்காக கோபப்பட்டுள்ளார்.
கலைஞர் 100 விழாவிற்கு நடிகர் தனுஷ் வேட்டி சட்டையுடன் வந்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் வந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வந்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வந்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வந்துள்ளார்.
கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்திரன் வந்துள்ளார். இவரின் பேச்சினைக் கேட்க திரைப்பிரபலங்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கிண்டி ரேஸ் கோர்ஸில் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகை நயன்தாரா, சோனியா அகர்வால் மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள மேயர் பிரியா ரேஸ் கோர்ஸ்க்கு வந்தார்.
இந்த நிகச்சியில் பார்வையாளராக கலந்து கொள்கின்றேன். அவரது ஆட்சியில் எனக்கு 8 விருதுகள் வழங்கப்பட்டது. பெரியார் போன்ற படங்கள் வேலை செய்யும்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது என இயக்குநர் தங்கர் பச்சன் கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு இயக்குநர் வெற்றி மாறன் வந்துள்ளார்.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் கூல் சுரேஷ் ஜாதிகள் இல்லையடி பாப்பா என புத்தகங்களில் நாம் படித்ததைப் போல் வாழ்ந்தவர் கலைஞர். குலத்தொழிலை ஒழித்து அனைவரும் மருத்துவராகலாம் என்ற சூழலை உருவாக்கியவர் கலைஞர். கோபாலபுரம் பள்ளியில்தான் நான் படித்தேன். அங்கு தான் மு.க.ஸ்டாலினும் படித்தார். எனக்கும் அவர்களுக்கும் தொடக்க காலத்தில் இருந்தே ஏதோ ஒரு தொடர்பு இருந்துள்ளது. வரும் காலங்களில் அனைவரும் கலைஞர் கூறியவற்றை பின்ற்றி சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும். ஜாதி வேறுபாடு பார்க்காமல் இருக்கவேண்டும். இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என இயக்குநர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் இல்லாதது வருத்தம் அளிக்கின்றது என நடிகை ரோகினி தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது கலைஞரில் 50 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. எழுத்தை தனது ஆயுதமாக்கியவர். சீர்திருத்தவாதி, கதாசிரியர், வசனகர்த்தா, முற்போக்கு சிந்தனையாளர் இப்படியான கலைஞரை திரைத்துறையில் இருந்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் மகிழ்ச்சி என நடிகை ரோகினி தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகள் ஒரு மனிதனைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அது பெரிய சாதனைதானே. அப்படிப்பட்ட கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவது மகிழ்ச்சி என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டை திரையுலகமே சேர்ந்து கொண்டாடிக்கொண்டு உள்ளது. திரைத்துறைக்கு அவர் செய்த பணிகளில் திரை வசனம் எழுதி பெருமை உண்டாக்கிய கலைஞர்தான். திரையுலகம் பலகீனமாக இருந்தபோதெல்லாம் பலப்படுத்திய பெருமை கலைஞருக்கு உண்டு. அதற்காக உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் 100 நிகழ்ச்சி மேடையினை கிராமிய கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சியால் அலங்கரித்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மனோகரா படத்தில் கலைஞர் வசனத்தினை கலைஞர் 100 விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக பேசிக் காட்டி அசத்தியுள்ளார்.
திரைத்துறையினர் நடத்தும் கலைஞர் 100 விழா மேடை பறை ஆட்டத்தினாலும் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைத்துறையினரையும் உற்சாகமூட்டியுள்ளது.
கலைஞர் 100 நிகழ்ச்சிக்காக மிகவும் பிரமாண்டமான முறையில் மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் 100 நிகச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருப்பதால் என்னை அழைத்துள்ளனர்.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது எனக்கு பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் திரைத்துறையினர் நடத்தும் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
கிண்டி ரேஸ் கோர்ஸில் திரைத்துறையினர் நடத்தும் கலைஞர் 100 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
கலைஞர் 100 பிரமாண்ட நிகழ்ச்சியைக் காண கிண்டி ரேஸ் கோர்ஸில் மொத்தம் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயக்குநர் மோகன் ராஜா கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்துள்ளார்.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஷாக்ஷி அகவர்வால் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
நடிகை ஷாக்ஷி அகர்வால் கலைஞர் 100 நிகழ்ச்சியில் தான் நடனமாடவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் தானும் ஒரு சிறு பங்காக இருப்பது தனக்கு பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் 100 ஏ.வி - ஐ இயக்குநர் விஜய் இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் 100 விழா நிகழ்ச்சிகள் வரும் பொங்கல் விடுமுறை தினங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
கிண்டி ரேஸ் கோர்ஸில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுவதால் கிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களிடம் உள்ள அனுமதிச் சீட்டினை இணையத்தில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கலைஞர் 100 விழா குறித்து நடிகர் விஜய் பேசியது வைரல் ஆகிவருகின்றது. அதில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என நடிகர் விஜய் பேசியுள்ளார். அப்போது மேடையில் சூர்யா மற்றும் அஜித் உள்ளனர்.
கலைஞர் கருணாநிதி மொத்தம் 18 திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி 57 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி மொத்தம் 32 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கலைஞ்சர் கருணாநிதி மொத்தம் 24 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.
கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தென்னிந்திய திரைப்பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைத்துறையினர் கலைஞர் 100 என்ற தலைப்பில் விழா இன்று அதாவது ஜனவரி 6ஆம் தேதி நடத்துகின்றது. இந்த பிரமாண்ட விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது.
Background
தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் கலைஞர் 100 (Kalaignar 100) விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை திமுக சார்பில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா வளர்ச்சியில் கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் எதிர்பாராதவிதமாக சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த நிலையில், கலைஞர் 100 விழா ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என மறுதேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச. 28ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கலைஞர்100 விழா மீண்டும் தள்ளிப்போகுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்று கலைஞர் 100 விழா மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கலைஞரைப் போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 22.500 இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாலை 4 மணிக்குத் தொடங்கி 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பிற மொழி உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் விஜய், கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை அவருடன் கொண்டாடி மேடையினை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், அவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் எனவும் பேசியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் இவ்வாறு பேசும்போது மேடையில் நடிகர்கள் அஜித் மற்றும் சூர்யா ஆகியோர் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -