• 16 வது நிதிக் கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை

  • சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில், எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் 48 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  • தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை மையம்

  • வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய 2வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன

  • 4 படங்கள் ஓடிவிட்டால் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று தற்போதுள்ள நடிகர்கள் எண்ணுகின்றனர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

  • தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது - சென்னை அழைத்துவர தமிழக போலீசார் திட்டம்

  • முதுமலை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான் கூட்டங்களை விரட்டிய ஆந்திர சுற்றுலா பயணிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

  • மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தீவிர போராட்டம்

  • சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

  • தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு - நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 10,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது

  • திருப்பூர்: உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

  • கோவை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில்  500-க்கும் மேற்பட்ட பைக் ரைடர்கள் கலந்துக்கொண்டனர்

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டேரி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் வேதனை

  • 2026 தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும் - பா.ரஞ்சித் பேச்சு