டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களின் முதன்மைத் தேர்வு விடைத் தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதன்படி, 2022ஆம் ஆண்டுகளில் குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வுகளுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வுகள் 2023, 24ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.  குறிப்பாக மே மாதம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வும் 2023ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வும் நடந்தது. இவர்களுக்கான நேர்காணல், இறுதித் தேர்வு முடிவுகள் 2024-ல் வெளியாகின.

இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வு விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை டிஎன்பிஎஸ்சி (TNPSC) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

Continues below advertisement

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்; தொடங்கிய அதிரடி நடவடிக்கைகள்

டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக பிரபாகர் ஐஏஎஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு ஏராளமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 92 வேலை நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் பல்வேறு தேர்வுகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

டிஎன்பிஎஸ்சி தளத்துக்கு எக்ஸ் பக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. பல்வேறு அப்டேட்டுகள் அதில் வெளியிடப்பட்டன. குறிப்பாக குரூப் 2 தேர்வு, குரூப் 4 தேர்வு அறிவிப்பு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதேபோல நேற்று முன்தினம் டிஎன்பிஎஸ்சி தளத்துக்கு எனவே தனி டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டெலிகிராம் சேனலில் சேர்வது எப்படி?

தேர்வர்கள்  https://t.me/TNPSC_Office என்ற இணைப்பை க்ளிக் செய்து, சேனலில் இணையலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/