ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை அமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக, படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்குவதுடன், ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரித்துளார்.
அண்மையில் வெளியான படத்தின் டீசரில், 1975ம் காலக்கட்டத்தில் நடந்த சம்பவம் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக இருக்கிறார். அவருடைய உடைகள் 70 காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. முதல் பாகத்தில் கேங்ஸ்ஸ்டராக பாபி சிம்ஹா இருந்ததை போல், இரண்டாம் பாகத்தில் கேங்க்ஸ்டராக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படத்தின் மீதன எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்திருந்தது,
இந்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜிகர்தண்டா2 படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ், இரண்டாம் பாகத்தை மலைகிராமத்தில் படமாக்கியதாகவும், அந்த கிராமத்தில் இருந்த 65 பேரை தேர்வு செய்து 2 மாதங்கள் பயிற்சி கொடுத்ததாகவும், படத்தில் அவர்கள் சிறப்பாக நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மிமேனன், உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் கதையால் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படம் ரிலீசாக உள்ளதால் ஆர்வத்துடன் ரசிகக்ரள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Seeman Speech: நயன்தாராவை தூக்கிட்டு போக தெரியாதா? சீமான் சர்ச்சை பேச்சு