Seeman Speech: நயன்தாராவை தூக்கிட்டு போக தெரியாதா? சீமான் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நயன்தாரா பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Seeman: நாகப்பாவை கடத்தின வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கிட்டு போக தெரிஞ்சி இருக்காதா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். 

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் கள நிகழ்விற்காக சீமான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக  திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வீரப்பன், நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாங்குனவங்க எங்க?

இயற்கை வளங்கள் குறித்து பேசிய சீமான், “சந்தனமரங்கள் தான் பெரிய அளவில் வருவாயை கொடுத்தன. சந்தன மரங்கள் வளர்க்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். எங்க ஆளு( வீரப்பன்) இருந்த வரை மரங்கள் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், அவர் மீது சந்தன மரங்களை வெட்டிட்டாரு, காடுகளை அழிச்சிட்டாரு, யானைகளை கொன்றாருன்னு அநியாயமாக பழிபோடுகிறார்கள்.

நயன்தாராவை தூக்கிட்டு போக தெரியாதா?

அவர் இருந்த போது காடு பாதுகாப்பாக இருந்தது. அவரு இருந்து இருந்தால் காவிரி நிலைமை வந்து இருக்குமான்னு யோசித்து பார்க்க வேண்டும். சந்தனமரங்களை வெட்டி வித்தாரு, ஏத்துக்கிறேன். யானை தந்தங்கள் கடத்தி வித்தாரு ஏத்துக்கிறேன். ஆனால் வித்தவரு காட்டுக்குள்ள இருந்தாரு. வாங்கனவங்க எங்கே இருக்காருன்னு சொல்லமாட்றீங்களே. சந்தனமரங்களை விற்று காட்டுள்ள பெரிய பெரிய பங்களா கட்டினாரா?

காட்டுக்குள்ள சாராயம் காய்ச்சினாரா, புகைப்பிடித்தாரா, கட்டிய மனைவி தவிர வேறொரு பொண்ணை தூக்கிட்டு போனாரா..? நாகப்பாவை கடத்துனவருக்கு நயன்தாரா தூக்கிட்டு போக தெரியாதா? அவர் தமிழன் மாண்போடு வாழ்ந்தவர். அவர் வெளியே வந்து பேசினால் பலர் சிக்க கூடும் என்பதால் கொலை செய்யப்பட்டார்” என்றார். 

மறைந்த வீரப்பனுடன் நயன்தாராவை வைத்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: R Parthiban Birthday : எதையுமே புதிதாக முயற்சிப்பது...இயக்குநர் ஆர் பார்த்திபன் பிறந்தநாள் இன்று

Suriya 43: வாவ்.. ஆயுத எழுத்து, சில்லுனு ஒரு காதல் வரிசையில் மீண்டும் காலேஜ் பையன் ரோல்.. சூர்யா 43 அப்டேட்!

Continues below advertisement