லியோ


இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று லியோ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன் , சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


நான் ரெடிதான் பாடல்






லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. விஜய் , அசல் கோலார் இந்தப் பாடலை இணைந்து பாடியுள்ள நிலையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். நான் ரெடி பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது  நான் ரெடி பாடலின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி வெர்ஷன்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


இதுவரை வெளியான பாடல்கள்


லியோ திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் சமீபத்தில் வெளியாகியது. தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி, ஆகிய மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


லியோ சிறப்புக் காட்சிகள்


லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்காக தமிழ்நாடு அரசிடம் படக்குழு விண்ணப்பித்திருந்தது. முன்னதாக லியோ திரைப்படம் வெளியாகி முதல் ஆறு நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


மேலும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 4 மணி அல்லது 7 மணி காட்சிகள் திரையிடப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நிலையில் தற்போது சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன்படி அக்டோபர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் எனவும், நள்ளிரவு 1:30 மணிக்கு இறுதிக் காட்சி முடிவடைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சியை மட்டுமே திரையிட வேண்டும் என்றும், டிக்கெட் விற்பனைகளில் எந்த விதமான விதிமீறல்களும் நடைபெறாமல் இருக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமுதா ஐ.ஏ.எஸ். மேலும் கூட்ட நெரிசல்  மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.