Thalaivar 170: தலைவர் 170 படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்றுள்ள ரஜினி, பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். 


தலைவர் 170:


ஜெயிலர் படத்தில் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேலுடன் தலைவர் 170 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். ரஜினியை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் என பெரிய நட்சத்திர ஜாம்பவான்கள் இணைந்துள்ளனர். 


32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மீண்டும் இணைந்து நடிப்பதாலும், மாமன்னன் படத்தின் மூலம் வில்லனாக கொண்டாடப்பட்ட ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதாலும், பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான ராணா டகுபதி ரஜினி கூட்டணியில் இணைந்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கியது. அதற்காக காரில் சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. க்ஷ


பொன் ராதாகிருஷ்ணனன் - ரஜினிகாந்த் சந்திப்பு:


தொடர்ந்து நேற்று வெளியான வீடியோ ஒன்றில், ரஜினி திருநெல்வேலி சென்றிருப்பதும், அப்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு இங்கே வந்திருப்பதாக அவரே கூறுவது இணையத்தில் வைரலானது. தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து ரசிகர்களின் பார்வையிலும், சமூக ஊடங்களிலும் ரஜினி டிரெண்டாகி வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்றிருந்த ரஜினி, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளார். 


இருவரும் ஒன்றாக கைக்குலுக்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 






மேலும் படிக்க: Thalaivar 171: கலக்கிட்ட கண்ணா.. தலைவர் 171 கதை கேட்டு ரஜினி ரியாக்‌ஷன்.. லோகேஷ் சொன்ன சீக்ரெட்!


Seeman Speech: நயன்தாராவை தூக்கிட்டு போக தெரியாதா? சீமான் சர்ச்சை பேச்சு