Jawan Cast Salary: பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே ஆவலுடன் காத்திருந்தது. 


குறிப்பாக ஷாரூக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் அதிகமாகவே இருந்தது. படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார் ஷாரூக். படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 




அதேபோல், உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் முதல் காட்சி ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக ஜவான் படத்திற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தரப்பில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. 




இந்நிலையில் படத்தின் நடித்தவர்களின் சம்பளம் என்ற கேள்வி தற்போது இணையத்தில் அதிகம் தேடப்படக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. இந்த படத்தை ஷாருக்கானே தயாரித்துள்ளார். படத்தினை உருவாக்க மொத்தம் ரூபாய் 300 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாரூக்கானுக்கு ரூபாய் 100 கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாயகி கதாபாத்திரமான நர்மதா ராய் கதாபாத்திரத்தை நடித்த நயன்தாராவுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வில்லன் கதாப்பாத்திரமான காலீ கெய்க்வாட் கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ரூபாய் 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தினை இயக்கிய இயக்குநர் அட்லிக்கு ரூபாய் 55 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 


படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?


தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ஜவான் திரைப்படம் ரீலீசாவதற்கு முன்னரே 5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால் படத்தின் வசூல் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூபாய் 80 கோடி வரை பாக்ஸ் ஆஃபீசில் வசூல் ஆகும் என கூறப்படுகிறது. 




Jawan: அட்லீ நீங்க டான்ஸரா மாறிடுங்க.. ஜவான் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி.. வைரல் வீடியோ இதோ..!


Jawan Release: இலவசமாக ஷாருக்கானின் ஜவான் படத்தை வெளியிடும் ரசிகர்கள்! செம்ம கடுப்பில் படக்குழு! இப்படியெல்லாம் பண்ணாதீங்க!


Today Release movies: ஜவான் முதல் ரத்தத்தை உறைய வைக்கும் தி நன் வரை...!வீக் எண்டை கொண்டாட இவ்ளோ படங்களா..?