இன்று ஷாருக்கானின் ஜவான், சேரனின் தமிழ் குடிமகன், அனுஷ்கா செட்டியின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் ஹாலிவுட்டின் ஹாரார் படமான தி நன் இன்று ரிலீசாகி உள்ளது.
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, யோகிபாபு என பலரும் நடித்திருக்கும் ஜவான் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. காலை முதலே காத்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஜவான் ரிலீசை கொண்டாடினர். ஆக்ஷன் காட்சிகளில் ஷாருக்கானும், நயன்தாராவும் அசத்தி இருப்பதாகவும், வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஸ்கோரை அள்ளி இருப்பதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். ஸ்டார் நடிகர்களின் ஆக்ஷனுக்கு ஏற்ப படத்தில் இடம்பெற்றிருந்த அனிருத் இசையும் பெரிதாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்க்குடிமகன்
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் இயக்குநர் சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் ஸ்ரீபிரியங்கா, துருவா, லால், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜாதி வன்மம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளை கொண்ட படமாக தமிழ் குடிமகன் உள்ளது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
2 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு அனுஷா ஷெட்டியின் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. 2020ம் ஆண்டு வெளியான நிசப்தம் படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நவீன் பொலிஷெட்டி, முரளி சர்மா, நாசர், துளசி என பலர் நடித்துள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சமையல் கலைஞராக அனுஷ்கா நடித்துள்ளார்.
தி நன்2
2008ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஹாரர் படமான ‘நன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. டைசா ஃபார்மிகா நடித்துள்ள இந்த படத்தை மைக்கேல் சாவ்ஸ் இயக்கியுள்ளார். 1956ம் ஆண்டு நடக்கும் சம்பவத்தில் பெண் பாதிரியார் கொல்லப்பட்டதால் படத்தின் கதை தொடங்குகிறது. த்ரில்லர் காட்சிகளை கொண்ட படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
நூடுல்ஸ்
அருவி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மதன், கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாவீரன் படங்களை தொடர்ந்து நூடுல்ஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் நடித்தது மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹரீஷ் உத்தமன் ஹீரோவாக நடித்துள்ளார். 2 நிமிடத்தில் படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் எடுத்த தவறான முடிவால் ஒரு குடும்பமே போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக் கொள்ளும் படம் தான் நூடுல்ஸ். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.
அங்காரகன்
சத்யராஜ், ஸ்ரீபதி நடித்திருக்கும் அங்காரகன் படம் நாளை வெளியாகிறது. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் அங்காரகன் படத்தில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா,நேகா ரோஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இது தவிர அங்காரகன், பரிவர்த்தனை, துடிக்கும் கரங்கள், ஓங்கி அடித்தால் ஒன்ற டன் வெயிட்டு, RedSandalwood உள்ளிட்ட படங்கள் நாளை ரிலீசாக உள்ளது.
மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!