இயக்குநர் அட்லீயின் முதல் இந்தி படமாக வெளியாகியுள்ள ‘ஜவான்’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் செயல் படக்குழுவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 


அட்லீயின் முதல் இந்தி படம்


ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குநராக உருவெடுத்த அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அவரின் முதல் படமாக ஜவான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மனைவி கௌரி கான் ரெட் சில்லி நிறுவனம் மூலம் சொந்தமாக படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 






இந்த படம் உலகெங்கிலும் இன்று ரிலீசாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் படத்தின் 2 ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் ஜவான் திரைப்படத்திற்கு மட்டும் முதல் நாளிலே சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் டிக்கெட் முன்பதிவு மட்டும் உலகெங்கிலும் ரூ.50 கோடி வரை கலெக்‌ஷனை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 






ஜவான் படம் ரிலீசாவதை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் படக்குழுவினர் அனைவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று திடீரென ட்விட்டரில் ஜவான் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. 


அதிருப்தியில் ஜவான் படக்குழு


இந்நிலையில் ஜவான் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் எல்லாம் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதலே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர். இப்படியான நிலையில் படம் சூப்பராக உள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், பலர் தியேட்டரில் ஜவான் படத்தின் காட்சியை வீடியோவாக பதிவிடுவதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு போய் விடும் என படக்குழு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.  இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட் போல, நேராக சமூக வலைத்தளங்கள் போல இலவசமாக எல்லாமே கிடைக்கும் என கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க:  Jawan Twitter Review: பாலிவுட்டை பதம் பார்ப்பார்களா தமிழ் படைப்பாளர்கள்! வெளியானது அட்லீயின் 'ஜவான்’ - ட்விட்டர் விமர்சனம் இதோ!