தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் நடித்து வருவதால் படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது.






தற்போது, மிர்னா மேனன் எனும் நடிகை ஜெயிலர் படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. மிர்னா மேனன் இதற்கு முன்பாக, "ஆனந்தம்" எனும் தமிழ் வெப் சீரிஸிலும், பிக் ப்ரதர் எனும் மலையாள படத்திலும் நடித்துள்ளார். அதுபோக, புர்கா எனும் தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமா மட்டுமல்லாமல், "க்ரேசி ஃபெல்லோ" மற்றும் "உக்ரம்" எனும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 


ஏற்கனவே, பல நட்சத்திரங்கள் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல திரையுலக கலைஞர்கள் இப்படத்தில் இணையும் தகவல்களை கேட்டு மக்கள் உற்சாகமாகவுள்ளனர்.






முன்பாக, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. அவ்வப்போது நடிகர் ரஜினியின் போட்டோ, இணையத்தில் லீக் ஆகி வைரலாவது வழக்கம். ஜெயிலர் படம் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Samuthirakani : சமுத்திரக்கனி அலுவலகத்தில் நள்ளிரவு நுழைந்த மர்மப்பெண்..! நடந்தது என்ன தெரியுமா..?


Bigg Boss 6 Contestant List : போடு வெடிய..! இதோ பிக்பாஸ் போட்டியாளர் லிஸ்ட்..! வெளியான முழு விவரம்