கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயதான ரமேஷ். இவர் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாயில் இரும்பு கம்பி சொருகிய நிலையில், தனது வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமேஷை அவரது உறவினர் ஒருவரே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரமேஷ் தனியாக இருந்தபோது சொத்து தகராறில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் இருந்த சுரேஷ், ரமேஷை கம்பியால் தலையில் தாக்கி இருக்கிறார். பின்னர் வாயில் கம்பியை வைத்து சொருகி கொலை செய்துள்ளார்.
ரமேஷை கொலை செய்த பின்னர் சுரேஷ் காட்டுப்பகுதியில் தலைமறைவாகி பதுங்கி இருந்து வந்துள்ளார். நீண்ட நேரமாக தலைமறைவாக இருந்த அவர் அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரகசியாக சென்ற காவல்துறையினர், சுரேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
சுரேஷிடம் ரமேஷின் கொலை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திய வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொலை செய்த சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, பிரச்னை தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. குடிபோதையில் ரமேஷை கம்பியால் தாக்கி கொலை செய்தேன் என்று சுரேஷ் கூறினார். தொடர்ந்து காவல்துறையினர் வேறு ஏதேனும் காரணமா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.