Bigg Boss 6 Tamil:  உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்று இரவு முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. 


இன்றைய முதல் நாளில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒவ்வொரு நபராக அறிமுகம் செய்து வைத்து பிரமாண்ட வீட்டுக்குள் அனுப்பி வைப்பார். அதன் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் தாங்கள் யார்..? தங்களது பின்புலம் என மேடையில் தாங்கள் அடையபோகும் எதிர்கால கனவு குறித்து தெரிவித்து வீட்டுக்குள் செல்வார்கள். 


இப்படி பிக்பாஸ் சீசன் 6 ஸின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று ஓரளவு கணித்த பொதுமக்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த பிரபலம்தான் பங்கேற்கிறார். இதோ அவர், இவர் என்று ஒவ்வொருவராக வரிசைப்படுத்தி வந்தனர். உங்கள் கணிப்பு சரியா..? தவறா..? என்பதை சொல்ல இதோ நாங்கள் வந்துவிட்டோம். 


நேற்று நடந்த சூட்டிங்கின்படி, இதுவரை 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் சென்று இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை அ முதல் ஃ வரை வரிசையாக காணலாம். 


பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் விவரம்: 



  • முதல் போட்டியாளர் - ஜி பி முத்து (டிக்டாக் பிரபலம்)

  • 2வது போட்டியாளர் - முகமது அஸீம் (சின்னத்திரை நடிகர்)

  • 3வது போட்டியாளர் - அசால் கோலார் (ஜோர்தாலே பாடல் புகழ்)

  • 4வது போட்டியாளர் - ஷிவின்கணேசன் (திருநங்கை, ஐடி துறை)

  • 5வது போட்டியாளர் - ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குநர்)

  • 6வது போட்டியாளர் - ஷெரினா (மாடல்)

  • 7வது போட்டியாளர் - ராம் ராமசாமி (தமிழ்நாடு கிரிக்கெட் வீரர், நடிகர்)







  • 8வது போட்டியாளர் - ADK (ஸ்ரீ லங்கா ராப்பர்)

  • 9வது போட்டியாளர் - ஜனனி (தொகுப்பாளினி)

  • 10வது போட்டியாளர் - அமுதவாணன் (விஜய் டிவி புகழ்)

  • 11வது போட்டியாளர் - மகேஸ்வரி (விஜே)

  • 12வது போட்டியாளர் - கதிர் (ஜி தமிழ் விஜே)

  • 13வது போட்டியாளர் - ஆயிஷா (சின்னத்திரை நடிகை)


மொத்தம் 16 பேர் கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் யார் என்ற அதிகாரபூர்வமாக தெரிந்துவிட்டது. மீதமுள்ள 3 பேர் இன்று இரவு நடக்கும் சூட்டிங் பிறகு தெரியவரும்.