Jailer Release LIVE : ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..’ மாஸ் காட்டும் ஜெயிலர் படக்குழு!
Jailer Release LIVE Updates : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் உலகெங்கும் இன்று வெளியானது. அதுகுறித்த அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ள நடிகர் வசந்த் ரஜினிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரஜினியிடம் தான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷய்ங்களை குறிப்பிட்டு கடைசியில் “ரஜினி அப்பா. ரீல் மற்றும் ரியல் உலகத்தில் நீங்கள் தான் என் ரத்தமாரே . உங்களை அப்பா என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் அவர்
ஜெயிலர் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் படத்தை பாராட்டியுள்ளார். ரஜியின் வயதிற்கு ஏற்ற வகையிலான ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு குடுத்தது சிறப்பான ஒரு முடிவு என்றும். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் என்று பல முக்கியமான நடிகர்கள் கெளரவ தோற்றத்தில் வரும் அத்தனை நடிகர்களுக்கும் முக்கியமான கதாபாத்திரங்களைக் கொடுத்து அவர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் என்று அவர் இயக்குநர் நெல்சனைப் பாராட்டியுள்ளார்
ஜெயிலர் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் மொத்தம் 49 கோடிகளை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 25 கோடிகளையும், கன்னடத்தில் 11 கோடிகளையும், கேரளாவில் 4 கோடிகளையும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 7 கோடிகளை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு பாராட்டுகள் பெருகி வரும் நிலையில் இந்த ஆண்டிம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை படம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்டப் படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் திரைப்படம் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ரஜினியின் ஸ்டைல் தொடர்பான காட்சிகள் 90களில் வெளியான ரஜினியின் படத்தை போல இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்
‘ஜெயிலரை பற்றி பேச வார்தை வரவில்லை. புல்லரிக்கிறது. தலைவர் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நெருப்பாக நடித்துள்ளார். நெல்சனின் எழுத்து சூப்பர். காமெடி காட்சிகளை ரசித்தேன். அனிருத் ஸ்பெஷல் ப்ளாஸ்ட் செய்துள்ளார். தெறி மாஸ் தலைவர் படத்திற்கு வாழ்த்துகள்.’என பதிவிட்டுள்ள இயக்குநர் சுப்புராஜ், புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தலைவருக்கு எவரும் நிகரில்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
ஜெயிலர் படத்தின் வெற்றி குறித்து நெல்சனை பாராட்டிய அனிருத்
தலைவரு நிரந்தரம் - ஜெயிலர் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பதிவு.
ஹாப்பி ஜெயிலர் டே ஃபோக்ஸ்!
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் முழு விமர்சனம் இங்கே :
Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!
ரோஹினி திரையரங்கில் ரஜினியின் தீவர ரசிகர் லாரன்ஸ் வந்திருந்தார்.
(Photo Credits : Twitter/ Rohini SilverScreens)
ரோஹினி திரையரங்கில் ஜெயிலர் படத்தை காண வந்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், குடும்பத்தினருடன் கேக் வெட்டினார்.
(Photo Credits : Twitter/ Rohini SilverScreens)
கேரளாவில் படம் பார்த்த மலையாள ரசிகர்கள் ஜெயிலர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். அத்துடன், லாலேட்டன் என்றழைக்கப்படும் மோகன் லாலின் நடிப்பையும் அவர்கள் ரசித்துள்ளனர்.
சென்னை ரோகிணி திரையரங்கத்திற்கு ஜெயிலர் படம் பார்க்க வந்த தனுஷ்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள ரஜினி பேனருக்கு அவரது ரசிகர்கள், 5 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
மேளத்தில் வண்ணப்பொடி போட்டு, கலர்ஃபுல் கொண்டாட்டத்தில் திருச்சி ரசிகர்கள்.
சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.
நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள, ஜெயிலர் படத்தின் ரிலீஸையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் ரஜினியின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
யசுதா ஹிடெடோஷி எனும் ஜப்பானை சார்ந்த ரஜினி ரசிகர், அனைத்து ரஜினி படங்களையும் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வருவாராம்.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு தொடங்கிய முதல் நாள் முதல் காட்சியை அனிருத், ரம்யா கிருஷ்ணன், கவின் ஆகியோர் பார்த்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள, ஜெயிலர் படத்தின் ரிலீஸையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கு வாசலில், ஹுக்கும் பாடலுக்கு வைப் செய்யும் இளைஞர் கூட்டம்.
தனுஷ், ரஜினியின் குடும்பத்தினருடனும் முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடனும் ஜெயிலர் படத்தை ரோஹினி திரையரங்கில் காணவுள்ளதாக தகவல்.
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை போடப்பட்டது. தற்போது அத்தடை நீக்கப்பட்டதால், நாமக்கல் ரஜினி ரசிகர்கள் வேட்டு வெடித்து ஜெயிலர் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி உள்ள நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் வைக்கபட்டுள்ள பேனரில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே.என் நேருவை திருச்சி ‘சூப்பர் ஸ்டாரே’ என புகழ்ந்துள்ளனர்.
‘மோசமான திரைக்கதை, லாஜிக் இடிக்கிறது, டார்க் காமெடியும் வொர்க்-அவுட் ஆகவில்லை, முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி சொதப்பல். ஆகமொத்தம், ஜெயிலர் ஒரு விபரீதம்’- விஜய் ரசிகர் ஒருவரின் ட்வீட்
திருச்சியில் இருக்கும் திரையரங்கின் வாசல் விழாக்கோலமாக காணப்படுகிறது.
‘முதல் பாதி முடிந்துவிட்டது. நெல்சன் சூப்பர் கம்-பேக் கொடுத்துள்ளார். அனிருத் ஒரே ஃபயர்தான். தலைவர் சொல்லவே வேண்டாம். அவர் காட் ஆஃப் மாஸஸ். இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங்.’ - ரஜினி ரசிகர் ஒருவரின் விமர்சனம்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பு அணில் என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜய், ரஜினியின் காக்கா- கழுகு கதையால், காக்கா என ரஜினி ரசிகர்களால் ட்ரால் செய்யப்பட்டு வருகிறார். இப்படி ஒருதரப்பினர் இருக்க, ‘ நெகட்டிவிட்டி வேண்டாம்..என்ன இருந்தாலும் நம்ப பையன் நெல்சன்’ என விஜய் ரசிகர்கள் நட்பு பாராட்டி வருகின்றனர்.
‘பெரிதாக எதுவும் இல்லை. ரஜினி-யோகி பாபு வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாடல்கள் எதுவும் வரவில்லை. ஒரே ஒரு ஆக்ஷன் காட்சியுள்ளது. சுமாரான இண்டர்வெல் காட்சி. சுமாரிலும் சுமாராக உள்ளது’ என முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ளார் ஒருவர்.
‘முதல் பாதி சுமாராக உள்ளது. காமெடி நன்றாக வொர்க்-அவுட்டாகியுள்ளது.’ - பொதுமக்களில் ஒருவர்.
‘முதல் பாதியில் ரஜினியின் இண்ட்ரோ காட்சி, அனிருத்தின் பின்னணி இசை, ரஜினி- யோகி பாபு காம்போ காமெடி சிறப்பாக உள்ளது. பாடல்களும், செண்டிமென்ட் காட்சிகளும் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. திரைக்கதை புதியதாக உள்ளது. இண்டர்வெல் காட்சி வேற மாறி.. இரண்டாம் பாதியில் காமியோ காட்சிகளில் சர்ப்ரைஸ் உள்ளது.’என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களிலும் கனடா, அமெரிக்கா, பஹ்ரைன் ஆகிய உலகநாடுகளிலும் முதல் நாள் முதல் காட்சியிற்கான கொண்டாட்டம் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
‘இது ஜெயிலர் நாள்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சார்பாக சிறப்பான தரமான ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த ஜெயிலர் படக்குழுவிற்கு வாழ்த்துகள்.’ - கார்த்திக் சுப்புராஜ்.
ரஜினியின் ரசிகர்கள் திரையரங்குகளின் வாசலில் வேட்டு வெடித்து ஆட்டம் போட்டு ஜெயிலர் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பார்க்கும் இடமெல்லாம், ரஜினியின் புகைப்படங்களும் அவரது ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்களும்தான் உள்ளது.
விக்ரம் ரிலீஸிற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை போல், நெல்சன் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை இணையத்தில் வலம் வருகிறது. இது பொய்யான தகவல் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தமிழ்நாடு தவிர்த்து பிற இடங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பல காட்சிகள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வீடியோ, போட்டோவாக பதிவேற்ற செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 900 ஸ்கிரீனில் படம் திரையிடப்படுகிறது. இதுவே தமிழ் சினிமாவில் அதிகப்பட்ச சாதனையாக பதிவாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம் ட்வீட் செய்துள்ளது. அதிகாலை சிறப்பு காட்சிகள் எதுவும் இல்லாமல் இதுவரை 32 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளது
மதுரை திரை அரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொப்பி.
பிரபல பொம்மை தயாரிக்கும் நிறுவனமான லீகோ வெர்ஷனில் ரஜினியின் ஜெயிலர் லுக்
பெங்களூர் மாநகரில், அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ரஜினிக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் ரிலீஸையொட்டி ரஜினி ரசிகர் செய்த செயல்
Jailer FDFS, Jailer From Tomorrow, Jailer bookings ஆகிய ஹாஷ்டாகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது
பெங்களூருவில் இருக்கும் திரையரங்கு ஒன்றின் வாசலில் கட்-அவுட் வைத்த ரஜினியின் கன்னட ரசிகர்கள்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினரை தாண்டி பலரும் பங்கேற்றனர். அத்துடன், மேடை ஏறி பேசிய பிரபலங்கள் சுவாரஸ்யமான கண்டெண்ட் கொடுத்தனர்.
தமன்னாவின் காவாலா, ரஜினியின் மாஸான ஹுக்கும் ஆகிய பாடல்கள் இன்று வரை பலரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகெங்கும் இருக்கும் ரஜினியின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பேனர் அடித்து ஜெயிலரின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதியான நாளை நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது.
Background
ஜெயிலர் படம் ரிலீஸ்
ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது.
சூப்பர் ஹிட் அடித்த பாடல்கள்
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வந்தது. அதன் பின், ஜுலை 6 ஆம் தேதி வெளியான காவாலா தொடக்கத்தில் டரால் வலையில் சிக்கினாலும், நாளடைவில் செம ட்ரெண்டானது. இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கும் இடம்மெல்லாம்,
காவாலா ரீல்ஸ் தென்பட்டது. அடுத்ததாக, இரண்டாவது சிங்களான ஹுக்கும், ரஜினிகாந்திற்கான பிரத்யேக பாடலாக இருக்கும் என யூகிக்கப்பட்டது. அதன் படி, அப்பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியும் ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாடத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது சிங்கிளான ஜு ஜு பி, முதல் இரண்டு பாடல்களை போல் பெரிதாக ஹிட்டாகவில்லை.
இசை வெளியீட்டு விழா சம்பவம்
திரை நட்சத்திரங்கள் சூழ, கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடந்த ஜெயிலரின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்தது. ரஜினியின் மேடை பேச்சு, ஊடகங்களின் கவனத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
ஜெயிலர் டிக்கெட் முன்பதிவு
ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே முதல் நாளிற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
சென்னை பொறுத்தவரை முதல் நாள் முதல் காட்சி, காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ ஸ்கீரின் ஆகும்.
உலகெங்கும் உள்ள ரஜினியின் ரசிகர்கள்
உள்ளூர் முதல் உலகெங்கும் ரஜினிகாந்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் வெளியாகும் ஒரு படத்தை கூட மிஸ் செய்யாமல், பார்க்கும் ரசிகர்களை பெற கொடுத்து வைத்துள்ளார் ரஜினி. அதிகமான ரசிகர்களை கொண்ட நட்சத்திரம் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேனர் அடித்து, பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பெங்களூரில் இருக்கும் ரசிகர்கள், இதுவரை வெளியான ரஜினியின் படங்களில் இருக்கும் மாஸான லுக்கை கட்-அவுட்டாக வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 5000 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கும் ரஜினி ரசிகர்களும் பெங்களூருவில் உள்ளனர். சென்னையில் 9 மணி காட்சி திரையிடப்படுவதால், முதல் காட்சியை சற்று முன்கூட்டியே காண, ரசிகர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எவ்வளவு வசூலை அள்ளும் ஜெயிலர்?
இப்போதெல்லாம் படம் வெளியாகும் முன்னரே, படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும், சாட்டிலைட் உரிமத்தையும் விற்றே பாதி லாபம் அடைகின்றனர் தயாரிப்பாளர்கள். பெரிய ஹீரோவின் படமாக இருந்தால், கதை சுமாராக இருந்தாலும் ஏதோ தெறிவிடும். விமர்சன ரீதியாக பின்னடைவு ஏற்பட்டாலும், பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படாது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் நடிக்கும் படக்கதை தரமாக இருந்தால் கேட்கவே வேண்டாம், படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர்தான்.
படம் பார்த்த ஜெயிலர் படக்குழுவினர் திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் ஃபயர் இமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
இதுவரை முன்பதிவு மூலம் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர். முதல் நாளில் இந்தியா முழுக்க, ரூபாய் 38 கோடி முதல் ரூபாய் 45 கோடி வரை பெரும் வசூலை பெற்று பெரிய ஓபனிங்கை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் வார இறுதியில் குடும்ப ரசிகர்களை கவனத்தை பெற்று 100 கோடி வசூலை தொடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -