தமிழகத்தில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் நாள் அன்று மாநிலம் முழுவதும் அவர்களின் ரசிகர் கொண்டாட்டத்தின் மூலம் விழாக்கோலம் உருவாகும். அதிலும் 90 கிட்ஸ் 2கே கிட்ஸ் என பாகுபாடு இல்லாமல் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது திரைபடமான ஜெயிலர் திரைப்படம் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து , ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.




அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜயா, ரத்னா, பியர்லஸ் மற்றும்  சீர்காழி பாலாஜி திரையரங்கம் உள்ளிட்ட  நான்கு திரையரங்களில் படம் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் நான்கு திரையரங்குகளின் வாயில் பகுதிகளில் ஏராளமான பேனர்களை வைத்து பல்வேறு வகைகளில் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஜெய்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டி மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 


Rajinikanth Jailer Movie: தனது ஊழியர்களுடன் ‘ஜெயிலர்’ படத்திற்கு வந்த தனியார் நிறுவன உரிமையாளர்; தீவிர ரஜினி ரசிகரின் நெகிழ்ச்சி சம்பவம்




அதனைத் தொடர்ந்து திரையரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேர்களுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தும், பால் அபிஷேகம் செய்தும் அவரது  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு காட்சிகள் துவங்கிய நிலையில் பொதுமக்கள் ரசிகர்கள் ஏராளமானவர் நீண்ட வரிசையில் நின்று  திரையங்கு உள்ளே சென்று படம் பார்த்து வருகிறார். ஜெயிலர் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.


Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!