Vinayakan : ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து கவனமீர்த்த மலையாள நடிகர் விநாயகன் இன்று ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

Continues below advertisement

விநாயகன்

தமிழில் விஷால் நடித்த திமிர் படத்தின் மூலம் கவனமீர்த்தவர் நடிகர் விநாயகன். தொடர்ந்து பல முக்கியமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றில் அவர் நடிக்கவில்லை. கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் கவனமீர்த்தார்.  நடிகர் விநாயகன் இன்று ஜைதராபாத் விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

போதையில் காவல் துறையினருடன் வாக்குவாதம்

கேரளாவில் இருந்து கோவா சென்றுகொண்டிருந்த விநாயகன் ஹைதராபாதில் விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது அவர் போதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விநாயகன் மீது புகார் அளிக்கப்படுவது  இது முதல் முறை அல்ல. ஏற்கனவே  கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் தகாத முறையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் விநாயகன். மேலும் மீடூ பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது அதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார் விநாயகன். “ நான் இதுவரை பத்துப் பெண்களுடன் உடலுறவுக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது நான் அவர்களின் சம்மதத்தைப் கேட்டேன். எனக்கு ஒருவரை பிடித்திருந்தது என்றால் அவருடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினால் நான் அவரிடம் நேரடியாக சென்று கேட்பதில் என்னத் தவறு இருக்கிறது. இதை நீங்கள் மீடூ என்று சொன்னால். நான் அப்படி தொடர்ந்து செய்வேன்.” என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு  விமான நிலையத்தில்  தனது சக பயணி ஒருவரிடம் விநாயகன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


மேலும் படிக்க : Actress Sharmila: தமிழ்நாட்டில் ஹேமா கமிட்டி தேவையில்லை... நடிகை ஷர்மிலா

Continues below advertisement
Sponsored Links by Taboola