தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் சசிக்குமார் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பு, எளிமையான கதை, எதார்த்தமான மனிதர்களை கொண்ட ஒரு கதையை மையப்படுத்திய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையிலிருந்து வந்த அகதிகள் சென்னையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்திய ஒரு படமாக இந்தப் படம் இருந்தது.

Continues below advertisement


கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வந்தது. அறிமுக மற்றும் இளம் இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து யோகி பாபு, ரமேஷ் திலக். கமலேஷ், எஸ் எஸ் பாஸ்கர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது.




படம் வெளியான போது ஆரம்பத்தில் 150 திரையரங்குகளில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி பின்னர் 300, 500 என திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.  7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை உலகளவில் ரூ.77 கோடி வரை வசூல் செய்துள்ளது.  இந்த நிலையில் தான் இந்தப் படம் திரையரங்குகளில் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து, இப்போது ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது. 


பொதுவாக எந்த ஹிட் படமாக இருந்தாலும் அந்த படத்தின் ஓடிடி ரிலீசுக்கு அதிக அளவுக்கு வரவேற்பு இருக்கும், அந்த வகையில் தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்,  டூரிஸ்ட் ஃபேமிலி ஜூன் 6ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.