தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 126 கோடி வசூலித்துள்ளது தி கோட். விஜய் ரசிகர்கள் திரையரங்கில் முற்றிலும் கொண்டாடும் விதமாக இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். விஜய் நடித்த முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் மற்றும் நடிகை த்ரிஷா , நடிகர் சிவகார்த்திகேயன் என நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
க்ளோன் செய்யப்பட்ட விஜய்
தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்த மகன் விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் படத்தின் இறுதியில் மகன் விஜய் தன்னைப் போலவே நிறைய விஜய்களை க்ளோன் செய்து வைத்திருப்பதாக படத்தை முடித்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. விஜய் இன்னும் ஒரு படத்திற்கு பின் தனது சினிமா கரியரை முடித்துக் கொள்ள இருக்கிறார். ஆனால் தி கோட்படத்தை இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருப்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது . இதுமட்டுமில்லாமல் படத்தின் இறுதியில் இறந்துபோவது விஜயின் க்ளோன் என்றும் விவாதம் தொடங்கியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விளக்கமளித்துள்ளார். “ தி கோட் படத்தில் மகன் விஜய் கதாபாத்திரத்திரம் கொடூரமானதாகவும் யாராலும் யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். படத்தில் விஜய் தன்னை மாதிரியே நிறைய க்ளோன் செய்து வைத்திருப்பதை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே காட்ட முடிவு செய்திருந்தேன். ஆனான் விஜய்க்கு கதை குழப்பமானதாக இருந்ததாக அவர் சொன்னதும் அதை கடைசியில் வைத்தேன். அதனால் தான் மகன் விஜய் கதாபாத்திரம் கடைசி வரை எந்த வித எமோஷனும் இல்லாமல் இருக்கிறது. “ என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.