இஸ்ரேலில் பாலஸ்தீன ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு நேற்றை தினம் யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில்  5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியாக உள்ள காசாவுக்கு இருநாடுகளும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அடிக்கடி அங்கு பிரச்சினை வெடிப்பது வழக்கம். காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில் பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 


இந்த தாக்குதல் சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இப்படியான நிலையில் பிரபல பாலிவுட் நடிகை நுஸ்ரத் பருச்சா நடிகை தனது திரைப்பட விளம்பரத்திற்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார். ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற அவரை தொடர்பு கொள்ள முயன்றும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், படக்குழுவினர், ரசிகர்கள் கவலை அடைந்தனர். 






கடைசியாக அவருடன் சென்ற குழுவினர் நேற்று மதியம் 12.30 மணியளவில் தொடர்பு கொண்டதாகவும், அதன் பின்னர் நுஸ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டனர். 


இப்படியான நிலையில் நுஸ்ரத் பருச்சா பற்றிய முக்கிய தகவல் கிடைத்தது. அதன்படி, அவர் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார் என்றும், தற்போது இஸ்ரேலில் இருந்து வெளியேற அங்குள்ள விமான நிலையத்தை நுஸ்ரத் பருச்சா அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் விமானம் மூலம் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நுஸ்ரத் தூதரகத்தின் உதவியுடன், அவர் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தற்போது இருக்கும் இடத்தைப் பற்றிய எந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 




மேலும் படிக்க: Israel Attack: இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம்.. 5000 ராக்கெட்டுகளை ஏவிய பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள்.. பலர் உயிரிழப்பு..


Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை