உலகக் கோப்பையில் இதுவரை மொத்தம் 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மட்டுமே இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பையின் நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஒரு நாள் உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அதிகபட்ச ஸ்கோர் செய்து புதிய சாதனையை படைத்தது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தது. 

பதிலுக்கு பேட்டிங் செய்த இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  326 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 102 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றிக்குப் பிறகு, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் புள்ளிகள் அட்டவணையின் நிலை எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்... 

நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை முதல் போட்டியில் அபாரமாக வீழ்த்தி, தற்போது உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் +2.149 உடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையை தோற்கடித்து 2 புள்ளிகளைப் பெற்று, நிகர ஓட்ட விகிதத்தை +2.040 ஆக உயர்த்திய தென்னாப்பிரிக்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தரவரிசை போட்டி வெற்றி  தோல்வி முடிவு இல்லை டை நிகர ரன் ரேட் புள்ளிகள்
நியூசிலாந்து 1 1 0 0 0 2.149 2
தென்னாப்பிரிக்கா 1 1 0 0 0 2.04 2
பாகிஸ்தான் 1 1 0 0 0 1.62 2
வங்கதேசம் 1 1 0 0 0 1.438 2
ஆஸ்திரேலியா 0 0 0 0 0 0 0
இந்தியா 0 0 0 0 0 0 0
ஆப்கானிஸ்தான் 1 0 1 0 0 -1.438 0
நெதர்லாந்து 1 0 1 0 0 -1.62 0
இலங்கை 1 0 1 0 0 -2.04 0
இங்கிலாந்து 1 0 1 0 0 -2.149 0

யார் கடைசி இடம்..? 

​​பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி  2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +1.620 பெற்றுள்ளது. 4-வது இடத்தில் உள்ள மற்றொரு ஆசிய அணி வங்கதேசம், தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. வங்கதேசம் தற்போது 2 புள்ளிகள் மற்றும் நிகர ஓட்ட விகிதம் +1.438 ஆகும். 

இந்த நான்கு அணிகளைத் தவிர வேறு எந்த அணியின் கணக்கும் இதுவரை திறக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாததால் 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. அதே சமயம் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் முறையே 7, 8, 9 ஆகிய இடங்களில் உள்ளன. இது தவிர, இந்த உலகக் கோப்பையை வெல்லும் வலுவான போட்டியாளர்களில் ஒன்றான கடந்த உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி கடைசியாக அதாவது 10வது இடத்தில் இருப்பதுதான் இதுவரையிலான புள்ளிகள் பட்டியலில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

இன்றைய போட்டி : யார் யார் மோதல்..? 

2023 உலகக் கோப்பையில் இன்று (அக்டோபர் 8) நடத்தும் இந்தியா தனது முதல் போட்டியில் பலமிக்க ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்பு இந்த இரு அணிகளும் உலக கோப்பையில் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 8 முறை வென்றுள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.