விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதில் இயக்குனர் மிஸ்கின் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அவரே கூறியுள்ளார். இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஹீரோ கதாபாத்திரத்திற்கும் இடையே சண்டை காட்சி இருக்கிறதாம். அந்த சண்டை காட்சி மிஷ்கின் ஏற்கனவே விருது விழா ஒன்றில் பேசியிருந்தார்.


தற்போது பேட்டி ஒன்றில் விஜய்க்கும் தனக்குமான சண்டை காட்சி குறித்து பேசினார் மிஷ்கின். இதில் ”விஜய்க்கும் எனக்கும் செம மாஸ் சண்டை காட்சி இருக்கிறது. நாங்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்தபோது திடீரென தெரியாமல் விஜய்யின் தலையில் அடித்துவிட்டேன். நான் உடனடியாக குட்டிமா என அவரிடம் ஓடி சென்று தெரியாமல் பட்டுவிட்டது என்று கூறினேன். விஜய் அதற்கு பரவாயில்லை” என கூறிவிட்டார். எனக்கு ஒழுங்கா ரிகர்சல் கொடுக்கும்படி கூறினார். பின் படமாக்கப்பட்ட மற்றொரு சண்டை காட்சியில் விஜய்யின் கை தெரியாமல் என்னை அடித்துவிட்டார். இதனால் விஜய் பதறிவிட்டார். என்னிடம் சாரி என கேட்டார். நான் பரவாயில்லை செல்லக்குட்டி என விஜய்யிடம் கூறினேன்' என பேட்டியில் பேசியுள்ளார் இயக்குனர் மிஸ்கின்.


லியோ படபிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது முதலே பரபரப்புக்கும் , எதிர்பார்ப்புக்கும் எந்த ஒரு குறையும் இல்லை. குறிப்பாக சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடி பாடல் வெளியான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மது, கஞ்சா தொடர்பான வார்த்தைகள் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ளதால் இந்த பாடல் இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்ல வழி வகுக்கும் என்று சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. விஜய் அரசியலில் பிரவேசிக்க முடிவு செய்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் வேண்டும் என்றே அவர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க 


Mission Impossible 7 Review: தங்கத்தட்டில் தரமான ஆக்‌ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!


Kalaignar Womens Assistance Scheme: வந்தது அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகைக்கு இது கட்டாயம்... தமிழ்நாடு அரசு சொல்றத கேளுங்க!