ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா மகாநடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, சச்சின் கெடகர், ரோகினி, அலி, வெண்ணிலா கிஷோர், லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படம் ஒரு பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. 

Continues below advertisement


 



ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ‘என் ரோஜா நீயே’ கடந்த மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து குஷி படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஆராத்யா' பாடலின் ப்ரோமோ வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானதில் இருந்து ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது. 


ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மெய்சிலிர்க்கும் 'ஆராத்யா' பாடலின் லிரிகள் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில் மதன் கார்க்கி தமிழ் பாடலின் வரிகளை எழுத சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா பாடியுள்ளனர். இந்தி வர்ஷனில் ஜூபின் நௌடியல் மற்றும்  பாலக் முச்சல், கன்னட பதிப்பில் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சின்மயி, மலையாள வர்ஷனில் கே. எஸ். ஹரிசங்கர் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் மேஜிக் செய்கிறது இப்பாடல்.  


 


'ஆராத்யா' பாடலின் லிரிகள் ட்ராக்  வீடியோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் மாயாஜாலத்தை படமாகியுள்ளது இப்பாடல். சமந்தாவுக்கும் - விஜய் தேவரகொண்டா இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி மிக அழகாக இந்த மெலடி பாடலில் வெளிப்பட்டுள்ளது. இது காதலர்களின் மிகவும் ஃபேவரட் பாடலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியான சில மணி நேரத்திலேயே லட்ச கணக்கில் வியூஸ்களை பெற்று வருகிறது. 




முன்னர் வெளியான ‘என் ரோஜா நீயே’ பாடலும் இணையத்தில் ட்ரெண்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. அதனை தொடர்ந்து வெளியாகியுள்ள 'ஆராத்யா...' பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மாகநடி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையே இருந்த கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.  


ஏராளமான ரசிகர்களை தனித்தனியே பெற்றுள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் இணைந்துள்ள 'குஷி' திரைப்படம்  செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.