பாலிவுட் சினிமாவின் தன்  ஆஜானுபாகான தோற்றம், அசரடிக்கும் நடன அசைவுகள் உள்ளிட்டவற்றால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து ’பாலிவுட்டின் கிரேக்க கடவுள்’ என வர்ணிக்கப்படுபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.


பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்த ஹ்ரித்திக், பாலிவுட் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷனின் மகனாவார். தன் திரைப்பயணத்தில் அறிமுகமானது முதல் ஏறுமுகத்திலேயே பயணித்த ஹ்ரித்திக், தன் தனிப்பட்ட வாழ்வில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார்.


சுமார் 14 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு தன் காதல் மனைவி சுஸானை விவாகரத்து செய்த ஹ்ரித்திக், 2013ஆம் ஆண்டு மூளையில் ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.


’பேங் பேங்’ படப்படிப்பின்போது ஹ்ரித்திக்குக்கு ஏற்பட்ட விபத்தால் மூளையில்  ரத்தம் தேங்கிய நிலையில்,  அதன் பின் தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சபா ஆசாத் என்பவரை ஹ்ரித்திக் காதலித்து வருகிறார். மேலும் பொது நிகழ்வுகள் அனைத்துக்கும் ஜோடியாக இவர்கள் வலம் வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளனர். 


தனது முன்னாள் மனைவி சுஸான் உடனும் விவாகரத்துக்குப் பிறகு ஹ்ரித்திக் சுமூகமான உறவைக் கொண்டுள்ள நிலையில், முன்னதாக சுஸானின் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு தன் இந்நாள் காதலி சபா ஆசாத் உடன் சென்ற மாதம் கலந்துகொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகின.


இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில், ஹ்ரித்திக் தன் காதலி சபா ஆசாத்துக்கு காதலுடன் முத்தமிடும் க்யூட்டான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


 






பாலிவுட் சினிமா புகைப்படக்காரர்களான பாப்பரசிக்காளால் விமான நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட நிலையில், இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது. பாலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் இருவரும் இந்த ஆண்டு இறுதியில்  திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Jacqueline : ஓங்கி கன்னத்தில் அடிக்கணும்போல இருக்கும்..அனுமதியில்லாம தொடுவாங்க.. மனம் திறந்த ஜாக்குலின்


Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!