மலையாளத்தில் விரைவில் வெளியாக இருந்த ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் இயக்குநர் 31 வயதான மனு ஜேம்ஸ் இன்று காலமானார்.
அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அஹானா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ள படம் ‘நான்சி ராணி’. இந்த படத்தில் சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர். அவரது கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ ரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மனு ஜேம்ஸ் மறைவு குறித்து ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் டபிள்யூ வர்கீஸ் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ மனமும் உடலும் நடுங்குகிறது.. என்ன எழுவது?? தற்செயலாக மனுவை ஒருநாள் சந்திந்தேன். அந்த அறிமுகமே எங்களுக்குள் ஆன்ம பந்தமாக மாறியது. அது என்னை நான்சி ராணி படத்தின் ஒரு அங்கமாக மாற்றியது. மனு மரணத்தின் அரவணைப்பில் காலமானார்.
இது எங்களுக்கு பெரிய இழப்பு... மனு தன் கனவுகளை விட்டு விலகி செல்லும் போது, நீங்கள் நிறைவேற்றிய உங்கள் கனவை, உங்கள் முதல் படமான நான்சி ராணி மக்கள் இதயங்களை உடைக்கும்... மலையாள மண்ணில் அந்த ஒற்றை படம் அழியாமை அடையும்...நிச்சயம்!!! அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாத மனித வாழ்வின் முன் அனைவரும் சிறியவர்களே..!” என பதிவிட்டு இருந்தார்.
2004 ம் ஆண்டு வெளியான ‘ஐ ஆம் க்யூரியஸ்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் வளர்ந்த பின் மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
மனு ஜேம்ஸுக்கு நைனா மேம்ஸ் என்ற மனைவி உள்ளார். இவரது இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறவிலங்காட்டில் நடைபெற இருக்கிறது.