பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்சு மனோஜ் 1993 ஆம் ஆண்டு வெளியான மேஜர் சந்திரகாந்த் படத்தில் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான டோங்கா டோங்கடி படத்தின் மூலம் ஹீரோவான மஞ்சு மனோஜ்  பிந்தாஸ் , பொதுகாடு,  பாண்டவுலு பாண்டவுலு தும்மேடா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 


இதற்கிடையில் 2015 ஆம் ஆண்டு பிரணதி ரெட்டி என்ற பெண்ணை மஞ்சு மனோஜ் காதல் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அடுத்த 4 ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது அஹம் பிரம்மாஸ்மி படத்தில் நடித்து மஞ்சு மனோஜின் 2வது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதன்படி மறைந்த ஆந்திர அரசியல் பிரமுகர் பூமி நாக ரெட்டியின் மகளான பூமி மௌனிகா ரெட்டியை தான் தான் அவர் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். கடந்தாண்டு ஹைதராபாத்தில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் முதல்முறையாக மஞ்சு மனோஜ்  மௌனிகாவுடன் பொதுவெளியில் தோன்றினார். 


அப்போது அவரிடம் ​​இரண்டாவது திருமணம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ​​சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்று மனோஜ் கூறினார்.  மேலும் மௌனிகாவுடனான தனது உறவு குறித்து ஊடகம் ஒன்றில் மஞ்சு மனோஜ் பேசியிருந்தார். 


அதில் நானும் மௌனிகாவும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் தெரிந்து கொண்டுள்ளோம். முதலில் நாங்கள் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அது விரைவில் காதலாக மாறியது. என் வாழ்க்கையில் மௌனிகாவை பெற்றதை நான் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் எனவும் மஞ்சு மனோஜ் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இருவரும் வரும் மார்ச் 3 ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திருமணம் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெறும்  என்றும், திருமண சடங்குகள் 10 நாட்கள் முன்னதாகவே கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி மனோஜின் சகோதரியான நடிகை லட்சுமி மஞ்சு வீட்டில் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மஞ்சு மனோஜின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.