TN Cabinet Meeting: மார்ச் மாதம் 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2023 - 24ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. 


தமிழ்நாட்டில் விரைவில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


இந்த கூட்டத் தொடரில் மகளிருக்கான மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.