தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்ததால் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஹாசீர் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2020ம் ஆண்டு அறிமுக இயக்குநரான கௌசிக் ராமலிங்கம் என்பவர் இயக்க உள்ள ஜாக் டேனியல் படத்தில் யோகி பாபு, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க இருந்தது என்றும், அதில் நடிப்பதற்காக யோகிபாபுவுக்கு ரூ.65 லட்சம் சம்பளமாக வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.20 லட்சத்தை முன்பணமாக பெற்று கொண்ட யோகி பாபு படப்பிடிப்பை தொடங்கியபோதும், நடிக்க வராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், நடிப்பதாக கூறி ரூ.20 லட்சம் பணத்தை பெற்று கொண்டு யோகி பாபு ஏமாற்றியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. 


யோகிபாபு மீதான இந்த மோசடி புகாரால் தமிழ் திரைத்துறையில் சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது ரிலீசாகி இருக்கும் ஜெயிலர் படம் வரையிலும், அடுத்து வெளிவர இருக்கும் கிங் ஆஃப் கோதா, ஜவான் உள்ளிட்ட உச்சக்கட்ட நட்சத்திங்கள் நடித்துள்ள படங்களிலும் யோகி பாபு நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக யோகி பாபு எந்த ஒரு தகவலையும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். 


இந்த மோசடி புகார் தொடர்பாக பேசிய இயக்குநர் கௌஷிக் ராமலிங்கம், தயாரிப்பாளரான ஹாசிர் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், படத்தை தொடர்ந்து எடுக்க பணம் இல்லாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், ஒரு கட்டத்துக்கு மேல் ஹாக் டேனியல் படத்தை கைவிடும் நிலைக்கு ஹாசிர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.


லொள்ளு சபா மூலம் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, அமீர் நடிப்பில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பையா, அட்டக்கத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், மான் கராத்தே, பரியேறும் பெரிமாள், கோலமாவு கோகிலா, ஜெயிலர், பொம்மை நாயகி, மாவீரன், டக்கர், துணிவு, அயலான், ஜவான், ஓ மை கோஸ்ட், லவ் டுடே, கூகுள் குட்டப்பா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். 


மேலும் படிக்க:Bhumika Chawla: ‘ரோஜா கூட்டம்' ஆப்பிள் பெண்... 'சில்லுனு ஒரு காதல்' ஐஸ்... 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய க்யூட் நாயகி பூமிகா பிறந்தநாள்!


Fahadh Faasil - Nazriya: காதலுக்கு நன்றி.. 9-ஆம் ஆண்டு திருமண நாள்... ஃபஹத் ஃபாசில் - நஸ்ரியா க்யூட் பதிவு!