மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 5,419 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,718 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால் கீழ்கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் ஆகியவற்றில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 51 கனஅடியாக தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 56.07 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 104 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி அனைக்கு தண்ணீர் வரத்து இல்லை, 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 9.05 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது,