மலையாள சினிமா தாண்டியும் தன் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருப்பவர் நடிகர் ஃபஹத் ஃபாசில். ஃபஹத் மலையாளம் கடந்து ரசிகர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனது க்யூட் நடிப்பால் பிற மொழி ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நஸ்ரியா.


திரையுலகில் தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது நஸ்ரியா மலையாள சினிமாவின் கவனத்தை மெல்ல தன் பக்கம் திருப்பி லைக்ஸ் அள்ளி வந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


நஸ்ரியாவும் ஃபஹத்தும் பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்.


மலையாள சினிமா தாண்டிய ரசிகர்களுக்கு முதலில் இவர்களது வயது வித்தியாசம் பெரிதாகத் தந்தாலும், அளவில்லா காதல், கெமிஸ்ட்ரி, காதலைத் தாண்டிய நட்பு என வலம் வந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை இந்த ஜோடி பெற்றது.


நஸ்ரியா தன் திருமணத்துக்குப் பிறகு  சினிமாவில் இருந்து விலகினாலும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக ரசிகர்களுடன் உரையாடி வந்தார்.


திருமணத்துக்குப் பிறகு கூடே படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும், அண்டே சுந்தரானிக்கி படம் மூலம் தெலுங்கில் சென்ற ஆண்டும் கம்பேக் கொடுத்த நஸ்ரியா, தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.


மறுபுறம், இந்திய சினிமா வியந்து பார்க்கும் சமகால நடிகர்களில் ஒருவராக விருட்சமென உயர்ந்துள்ள ஃபஹத் ஃபாசில், தற்போது நேரடி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பான் இந்தியா ரசிகர்களையும் தன்னை கொண்டாட வைத்து  வருகிறார்.


இந்நிலையில், இன்று ஃபஹத் ஃபாசில் -  நஸ்ரியா தம்பதியினர் தங்களது 9ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.


மலையாளர் இயக்குநர் அமல் நீரட் தங்களை எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள ஃபஹத், “இந்த காதலுக்கும் வாழ்க்கைக்கும் நன்றி, நமது 9 ஆண்டுகள்” எனக் காதலுடன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 







 இதேபோல் நடிகை நஸ்ரியா, தான் கணவர் ஃபஹத மற்றும் தன் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தினை தனத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.