Vijay TV serial Actress salary: விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா?

Vijay TV Serial Actress Salary List: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் முதன்மை கதாபாத்திரங்களுக்கு தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் முதன்மை கதாபாத்திரங்களுக்கு  ஒரு நாள் அல்லது ஒரு எபிசோட்டின் சம்பள பட்டியல் குறித்த தகவல்கள் பலராலும் பேசப்பட்டு வருகிறது .

Continues below advertisement

இந்த தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் பிரபலமான,  பலராலும் பேசப்பட்டு வரும் பாரதி கண்ணம்மாவில் நடித்துவரும் ரோஷினி ஹரிப்பரியன் நாள் ஒன்றுக்கு ரூ 15000 சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

Vinusha Devi | பாரதி கண்ணம்மா ரோஷிணிக்கு மாற்றாக வரும் வினுஷா தேவி யார் தெரியுமா?

முன்னதாக,அவர் சீரியலில் இருந்து வெளியேற போவதாக செய்திகள் வெளியாகியது.ரோஷினிக்கு சில சொந்த காரணங்கள் உள்ளதாகவும் அதனாலேயே சீரியிலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு நெருக்கமான சிலர் அவருக்கு பிரபல நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதனால் பாரதி கண்ணம்மா நாயகி தற்போது வெள்ளித்திரையை நோக்கி படையெடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றன     

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோ...பாரதிராஜா வாரிசு...யார் இந்த ஸ்டாலின் முத்து! - ஒரு சுவாரசிய ப்ரொஃபைல்!

அதற்கடுத்து, சூப்பர்ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துவரும் சுஜிதா நாளொன்றுக்கு ரூ 12,000 ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.  அவருடன் இணைந்து முக்கிய வேடமேற்று நடிக்கும் ஹேமா 6500 ரூபாயும் , காவியா 4,500 ரூபாயும் , சாய் காயத்ரி 5000 ரூபாயும் ஊதியமாக பெறுகின்றனர் 

VJ Deepika: பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து விலக இதுதான் காரணம் தீபிகா பளீச்

‘தென்றல் வந்து என்னை தொடும்’ நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரித்தில் நடித்துவரும் பவித்ரா நாளொன்றுக்கு ரூ 8000 சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் சுசித்ரா நாளொன்றுக்கு ரூபாய் 9000 ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது. இவருடன் நடிக்கும் ரித்திகா 4,500 ரூபாயும் , திவ்யா 4,500 ரூபாயும்,நேஹா 3000 ரூபாயும் ஊதியம் பெறுகின்றன.  

‛எங்க வீட்டு குத்துவிளக்கு...நீ நடிச்ச சீரியல் கெத்து...’ பளபளக்கும் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா! 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

 

Continues below advertisement