கோவையில் செல்போன் தொலைந்தது தொடர்பாக புகாரளித்த திருநங்கைக்கு விசாரணையின் போது பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது திருநங்கை. இவர் கடந்த வாரம் தனது செல்போன் களவு போனது தொடர்பாக கோவை சி 2 பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற காவலர் மூவேந்தன் வேள்பாரி (50) என்பவர் விசாரணை செய்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த மூவேந்தன் வேள்பாரி திருநங்கையிடன் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் திருநங்கையை தரக்குறைவாக பேசியதோடு, தான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் திருநங்கை அதிர்ச்சி அடைந்தார்.


காவலர் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் திருநங்க புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவலர் மூவேந்தன் மீது பந்தய சாலை காவல் துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து காவலர் பாலியல் தொல்லை அளித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய காவலரே, புகாரளித்த திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருடனான முன்னாள் காவலரின் கூட்டாளி கைது




தொடர் திருட்டில் ஈடுபட்ட வழக்கில் கைதான முன்னாள் காவலர் மூனிஸ்வரனின் கூட்டாளியான முபாராக் அலி என்பவரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவரின் வீட்டில் மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோடிய இருவரையும், அங்கு திரண்டிருந்த அக்கம் பக்கத்தினர் பிடிக்க முயன்றனர். இதில் மூனிஸ்வரனை பொது மக்கள் மடக்கிப் பிடித்த நிலையில், முபாராக் அலி தப்பியோடி தலைமறைவாகினர். இந்நிலையில் முபாராக் அலியை காவல் துறையினர் கிட்டாம்பாளையம் பகுதியில் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 பவுண் தங்க நகை, 3 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். ஆயுதப்படை காவலராக இருந்த மூனிஸ்வரன் திருட்டு வழக்கில் கடந்தாண்டு கைதான நிலையில், காவல் துறை பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வருமானத்திற்காக முபாராக் அலியுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


https://bit.ly/2TMX27X


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


https://bit.ly/3AfSO89


ட்விட்டர் பக்கத்தில் தொடர


https://bit.ly/3BfYSi8


யூடிபில் வீடியோக்களை காண


https://bit.ly/3Ddfo32