Ethirneechal Marimuthu: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் ஊர்மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.


இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.  சீரியலுக்கு டப்பிங் கொடுத்து கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். மாரிமுத்துவின் மறைவு திரைத்துறையில், சின்னத்திரையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 


சூர்யா மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. காலை முதல் அவரது இல்லத்தில் குவிந்த திரைத்துறை நண்பர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் மாரித்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருடன் ஒன்றாக நடித்த சின்னத்திரை நடிகர்கள் மாரிமுத்துவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 5 மணியளவில் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.


தேனியில் உள்ள பசுமலைத்தேரியில் மாரிமுத்துவுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தார் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை தேனியில் உள்ள மாரிமுத்துவின் உடலுக்கு ஊர்மக்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர்,வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அவரது உடலை தகனம் செய்யும் மயானத்திற்கு சென்றடைந்தது. 


அங்கு மாரிமுத்துவுக்கு உறவினர்கள் முன்னிலையில் இறுதி மரியாதை நடைபெற்ற நிலையில் உடல் தகனம் செய்யப்படது. உறவினர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், ரசிகர்கள்களிடம் இருந்து, குடும்பத்தாரிடம் இருந்தும் கண்ணீர் மழையில் பிரியா விடை பெற்றார் மாரிமுத்து. 


சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த மாரிமுத்து பிரபலமானார். அவரது நக்கலும், நையாண்டியுமான, எதிர்மறை குணம் கொண்ட கேரக்டரில் நடித்த மாரிமுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற ரசிகராக வலம் வந்தார். அண்மையில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ’பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலிவால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் திடீரென நிகழ்ந்த அவரது மறைவு பலரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.



 


மேலும் படிக்க: Ethir Neechal Replacement : இனி இவருக்கு பதில் இவர்.. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?


Vishal On Marimuthu: ”வாழ்க்கை யூகிக்க முடியாத ஒன்று..’ மாரிமுத்து மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல்..!