Ethir Neechal Replacement : இனி இவருக்கு பதில் இவர்.. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?
90களில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வந்தவர் மாரிமுத்து. படங்களில் நடிப்பதை தாண்டி கண்ணும் கண்ணும், புலி வால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளித்திரையில் குணசித்தர வேடங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையிலும் கால்பதித்தார். “இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தினாலும் “தக் லைவ்” நடிப்பாலும் எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக வாழ்ந்து சீரியல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவருக்காகவே அந்த சீரியலை பலரும் பார்க்க தொடங்கினர்.
தனது வெற்றி பயணத்தை நோக்கி செல்லும் பாதையில் கடின உழைப்பை வெளிப்படுத்தி ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு வந்தார். தனது உடம்பை கவனத்தி கொள்ள தவறிய மாரிமுத்துவிற்கு டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின், மருத்துவமனையில் தானே சென்று அனுமதியானார்.
எதிர்பாராதவிதமாக மாரிமுத்து காலமானார். இந்த தகவல் காட்டுத்தீயாய் இணையத்தில் பரவியது. பல திரை நட்சத்திரங்களும் சின்னத்திரை பிரபலங்களும் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
சில செய்தியாளர்கள், விருகம்பாக்கத்தில் உள்ள மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்த எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வமிடம், இவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என கேள்வி கேட்டனர், அதற்கு, “இந்த கேள்விக்கு பதில் சொல்ல இது சரியான தருணம் இல்லை”என கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இவர் இறந்த பின், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது. அவருக்கு பதில் எம்.எஸ் பாஸ்கர் அல்லது வேல ராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது மக்கள கருத்தாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -