வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்: ஷூட்டிங்கில் பிசி ஆகப்போகும் அஜித்... பக்காவா பிளான் போட்ட மகிழ் திருமேனி!


நடிகர் அஜித் தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், விடாமுயற்சிக்கான அப்டேட் வந்துள்ளது. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்களில் இணைய உள்ளார்.  அபுதாபி, துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.  அக்டோபர் 4ஆம் தேதி  அபுதாபியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அபுதாபியில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க


’சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேட்டை’ .. டிசம்பரில் களமிறங்கும் 3 ஹீரோக்கள் படங்கள்..!


2023 ஆம் ஆண்டு கிட்டதட்ட முடிவுக்கு வரவுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பாதி பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றது. ஆனால் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமா மிகப்பெரிய பிரபலங்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜூன் முதல் செப்டம்பர் வரை ஜெயிலர், மாவீரன், மாமன்னன், போர்தொழில் என பல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டின. மேலும் படிக்க


‘ராஜா ராணி’ முதல் ‘ஜவான்’ வரை.. அட்லீ படங்களின் முழு பாக்ஸ்ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதுதான்!


கோலிவுட் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ, பாலிவுட் திரையுலகிலும் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இப்படத்தை அவரே தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க


‘கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பார்த்து மன அமைதியை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை’ - பிரபல இயக்குநர் கருத்து


காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் த கேரளா ஸ்டோரி முதலிய படங்களை தான் பார்க்காமல் தவிர்த்து விட்டதாகவும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார் பாலிவுட் இயைக்குநர் விஷால் பரத்வாஜ். சமகால பாலிவுட் இயக்குநர்களில் குறிப்பித்தகுந்த ஒருவராக கருதப்படுபவர் விஷால் பரத்வாஜ். மக்பூல், கமினே, ஹைதர், ஓம்காரா உள்ளிட்ட படங்களிய இயக்கிய விஷால் பரத்வாஜ், மாறுபட்ட கதைகள், தனது கதைகளுக்குத் தேவையான அரசியல் என தனித்துவமானப் படங்களை இயக்கி பாலிவுட்டின் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார். மேலும் படிக்க


பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!


பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் 1969 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ராய், கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். மேலும் படிக்க