சென்னை திரும்பினார் நடிகர் விஜய்! லியோ இசை வெளியீட்டிற்கு தயாரா நண்பா...!
தளபதி 68 படத்திற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் நடிகர் விஜயின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க
வசூல் வேட்டையில் ‘ஜவான்’.; பாக்ஸ் ஆபிஸ் சாதனை குறித்து அப்டேட் கொடுத்த அட்லீ!
ஜவான் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூல் செய்துள்ளதாக இயக்குநர் அட்லீ இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி வெளியான இந்தப் படம் பல விமர்சனங்களை கடந்தும் வெற்றிகரமாக வசூல் சாதனை புரிந்து வருகிறது. மேலும் படிக்க
“இந்தப் படம் எனக்கு சவாலானது” - தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சரத்குமார்
தனது அடுத்தப் படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார். தமிழ் திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிட்னெஸ் கண்டு பலரும் வியந்துள்ளனர். தனது 18 வயது முதல் உடற்பயிற்சி செய்து வரும் சரத்குமார் Mr. மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். 67 வயதானாலும் இன்றும் தனது உடற்பயிற்சியை தொடர்வதோடு இளைஞர்களுக்கு ஃபிட்னெஸ் டிப்ஸ் வழங்குகிறார். மேலும் படிக்க
ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா.. ஷுட்டிங் செல்ல ரெடியான அஜித்
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு படம் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62-வது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அஜித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்கிறது. அஜித் மற்றொரு பக்கம் நடிகர் அஜித் குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மேலும் படிக்க
'அவரை தப்பு சொல்லாதீங்க’ .. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்களுக்கும் வேண்டுகோள்..!
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ACTC events நிறுவனம் செய்திருந்தது. மேலும் படிக்க
நீங்க நம்பலனாலும் இதான் உண்மை... விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் அப்டேட் சமீபத்தில் தான் வெளிவந்தது. நடிகை மிருணாளினி ரவி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சி. எஸ். அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் 2022ஆம் ஆண்டு முதல் உருவாகி வரும் ரத்தம் படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகியது. மேலும் படிக்க