தளபதி 68 படத்திற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் நடிகர் விஜயின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்தான அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
லியோ படம் எப்படி?
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
நான் ரெடி பாடல் குறித்து பேச மறுத்துவிட்ட அவர், அடுத்த வாரத்தில் இருந்து லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்தார். லியோ படத்தின் இசைவெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். லியோ படம் எப்படி வந்திருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும், படம் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் கூறினார். நடிகர் விஜய் இன்னும் படம் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார் லலித் குமார்.
சென்னை திரும்பிய விஜய்
தனது அடுத்தப் படமான தளபதி 68 படத்திற்காக லாஸ் எஞ்சலஸ் சென்றிருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பி உள்ளார். லியோ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் கூறியிருக்கும் நிலையில் நடிக ர் விஜய் சென்னை விமான நிலையம் வந்து சேந்துள்ள விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்காக அவர் சென்னை வந்திருக்கலாம் என்று இணைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்பாகவே படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்பதும் ஒரு யூகமாக முன்வைக்கப்படுகிறது.
தளபதி 68
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்திற்கான வேலைகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. விஜய் இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். மேலும் அமீர் கான் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.