Vidamuyarchi : ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா.. ஷுட்டிங் செல்ல ரெடியான அஜித்

விடாமுயற்சி படத்தின் படப்பிடப்பு துபாயில் தொடங்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் ஐந்தாவது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.

Continues below advertisement

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement

விடாமுயற்சி

துணிவு படம் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62-வது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அஜித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்கிறது.  அஜித் மற்றொரு பக்கம் நடிகர் அஜித் குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் கைவிடப்பட்ட நிலையில் மகிழ் திருமேனி கைகளுக்குப்போன, விடாமுயற்சி படமும் கைவிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.

இந்நிலையில் நார்வே, துபாய் எனப் பயணித்து தன் சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பியது அவரது ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தியது.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.  இதனால் அஜித் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

புது லுக்கில் அஜித்

மேலும் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் க்ளீன் ஷேவ் செய்து முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். விடாமுயற்சி படத்திற்காக அஜித் இந்த தோற்றத்தில் மாறியிருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என்று  படத்தின் இயக்குநர் மகிழ் திருமேணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அஜித்துடன் இணையும் த்ரிஷா

பெரும்பாலான படப்பிடிப்பு ஷெட்யூல் துபாயில் நடைபெற இருப்பதாகவும் மீதிக் காட்சிகள் பிற நாடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் ஐந்தாவது படமாக விடாமுயற்சி இருக்கும். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மாஸ்டர் புகழ் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்திற்கு, மீண்டும் ஒரு முறை அனிருத் இசையமைக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக விடாமுயற்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமானத் தகவலை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

Continues below advertisement