மூன்றே நாளில் ரூ.500 கோடி வசூலித்த ஜவான்.. பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை புரட்டிப்போடும் ஷாருக்!


ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் திரைக்கு வந்த மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வரை வசூலில் சாதனை படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலரும் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த கடந்த 7ம் தேதி திரைக்கு வந்தது.  இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடமாநிலங்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ஜவான் திரைப்படத்தை திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க


‘நானே பலியாடு ஆகிறேன்’ .. இசை நிகழ்ச்சி பிரச்சினை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை பதிவு..!


சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கனமழை பெய்ததால் ரத்து செய்யப்பட்டது. மேலும் படிக்க


சுதந்திர தினத்தில் வெளியாகும் புஷ்பா 2... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில்  கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து  புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. மேலும் படிக்க


‘அதிக கூட்டத்தால் குழப்பம்’ .. ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு மன்னிப்பு கேட்ட ACTC நிறுவனம்..!


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC Events நிறுவனம் ரசிகர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது.  சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. மேலும் படிக்க


தமிழ், இந்தி ஓவர்.. தெலுங்கில் அல்லு அர்ஜுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ..! இது என்ன படமா இருக்கும்?


ஜவான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து, புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தாலும், கமர்சியலாக உருவான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க


5-வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி.. ரஜினிகாந்த் போடும் மாஸ்டர் பிளான்..!


தலைவர் 171-வது படத்திற்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த ஐந்து படங்களைப் பார்க்கலாம். தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ரஜினிகாந்தின் 171-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் படிக்க


மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த ரஜினிகாந்த்... வைரலாகும் வீடியோ!


மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஜெயிலர் இமாலய வெற்றியை சுவைத்துள்ள ரஜினிகாந்த  தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். தலைவர் 170 படம் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும், ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க