Atlee - Allu Arjun: தமிழ், இந்தி ஓவர்.. தெலுங்கில் அல்லு அர்ஜுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ..! இது என்ன படமா இருக்கும்?

ஜவான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து, புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஜவான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து, புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

வசூல் வேட்டை நடத்தும் ஜவான்:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தாலும், கமர்சியலாக உருவான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜவான் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கி வரும் நிலையில், பாலிவுட்டில் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கமர்சியல் இயக்குனராக அட்லீ மீண்டும் வெற்றி பெற்றுள்ளர். இந்நிலையில் தான், அட்லீ தனது அடுத்த படத்தில் தெலுகு நடிகர் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி?

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், கதை தொடர்பாக இருவரும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜவான் படத்தின் வெற்றி மூலம் அட்லீ ஒட்டுமொத்த இந்தியா சினிமாவிற்கும் அறிமுகமாகியுள்ளார். அதேநேரம், புஷ்பா தி ரைஸ் திரைப்படம் மூலம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் அல்லு அர்ஜுன் தனது பக்கம் ஈர்த்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் சேர்ந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

புஷ்பா - தி ரூல்:

புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு வெளியாக உள்ள இப்படத்தை சுகுமார் இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ திரைப்பயணம்:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தனது இரண்டாவது படமான ”தெறி”-யில் விஜய் உடன் கைகோர்த்தார். அதோடு, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி, முன்னனி கமர்ஷியல் பட இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அதைதொடர்ந்து தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானை வைத்து, பெரும்பொருட்செலவில் ஜவான் எனும் படத்தை இயக்கினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola