Dec 01 Movies: காத்திருக்கும் கடைசி மாதம்.. டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் தமிழ் படங்கள் இதோ..!


இந்தியாவில் உள்ள சினிமா ‘வுட்’களில் அதிக பணம் புழங்குவதில் தமிழ் சினிமாவும் ஒன்று. இப்படியான தமிழ் சினிமாவில் வாரவாரம் சினிமாக்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரத்தில் அதாவது நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் நேரடித் தமிழ் சினிமாக்கள் என்ற வரிசையில் மொத்தம் 4 சினிமாக்கள் வெளியாகவுள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்றால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள பார்க்கிங் திரைப்படம். இதையடுத்து வெளியாகவுள்ள இரண்டு படங்களில் ஒன்று பிக் பாஸ் புகழ் பாலா நடிப்பில் உருவாகியுள்ள வா வரலாம் வா படமும், அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள சூரகன் என மொத்தம் 4 திரைப்படங்கள் வெளியாகின்றது.  மேலும் படிக்க


Paruthiveeran: 'ஞானவேலின் அயோக்கியத்தனம்’ .. பின்னணியில் சிவகுமார் குடும்பமா? - கரு.பழனியப்பன் சரமாரி கேள்வி..


கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படம் வெளியானது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தின் போது பல பிரச்சினைகள் நடந்ததாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல்கள் வெளியானது. இதனை அமீரும், ஞானவேல்ராஜாவும் தங்களுடைய நேர்காணல்களில் தெரிவித்தனர். குறிப்பாக ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை, திருடன் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு கண்டனம் குவிந்து வருகிறது. மேலும் படிக்க


Karthi - Gnanavelraja combo : ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி நடித்தது இத்தனை படங்களா? என்னென்ன படங்கள் தெரியுமா?  


தமிழ் சினிமா எத்தனையோ மாபெரும் வெற்றி படங்களை கடந்து வந்துள்ளது. அந்த வகையில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் தான் 'பருத்திவீரன்'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். கார்த்தியின் திரைப்பயணத்தில் இன்று வரை மிக முக்கியமான படமாக கருதப்படும் 'பருத்திவீரன்' திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இடையே கடந்த சில நாட்களாக நடைபெறும் மோதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க


Tiger 3 : ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் புக்செய்த சல்மான் கான் ரசிகர்.. யார் இந்த ஃபைசல் ஷைக்?


மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில்  அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது. மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: விஷ்ணு கோமாளி வில்லன்.. நிக்ஸனை வைத்து கேம் ஆடும் மாயா, பூர்ணிமா.. பிக்பாஸில் இன்று


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எந்த ஒரு தங்கு தடையும் இன்றி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கலவரமாக ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 58வது நாளுக்கான இன்றைய எபிசோட்  ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே கசமுசா என்ற பொதுவான கருத்து பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அல்ல வெளியேயும் அது தான் இருக்கிறது. அப்படி பட்ட நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் இருக்க இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "மாஸான ஒரு வில்லன் தான் படத்தை தூக்கி நிப்பாட்டுவான். ஹீரோவை விட அதிக வெயிட்டேஜ் வில்லனுக்கு இருந்தால் மட்டுமே தான் அந்த படம் ஹிட்டாகும். நான் ஒப்பான சொல்றேன். என்னை வில்லனா கூட பாத்துக்கோங்க. கடைசி வரைக்கும் நான் இருப்பேன். நான் வில்லனாவே இருந்துட்டு போறேன்" என விஷ்ணு பூர்ணிமாவிடம் தன்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு வைத்து பேசிகொண்டு இருக்கிறார்.  மேலும் படிக்க