டைகர் 3


மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில்  அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது.


ஸ்பை யுனிவர்ஸ்


டைகர் 3 படத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும்  நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியவர்கள் சிறப்புக் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இதனால் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் வெளியான முதல் நாளில் மட்டுமே படம் சுமார் 94 கோடி உலகளவில் வசூல் செய்தது. இந்தி திரைப்படம் வரலாற்றில் தீபாவளி அன்று வெளியாகியப் படங்களில் அதிக வசூல் ஈட்டியப் படமாக டைகர் 3 படம் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுடன் 15 ஆவது நாளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டைகர் 3 திரைப்படம் இதுவரை ரூ 447 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.