• மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த '2018' படம்.. ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!


மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான படம் “2018”.தியேட்டரில் வெளியான இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நோபின் பால் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.  இந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  •  ரசிகர்களே.. நாளை மறுநாள் மாமன்னன் இசை வெளியீட்டு விழா..! ரெடி ஆகுங்க..!


மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள  உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும்,  கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மேலும் படிக்க



  • “சாய் பல்லவி மீது எனக்கு க்ரஷ் இருப்பது உண்மைதான்...” - பேட்டியில் ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்!


நடிகை சாய் பல்லவி மேல் தனக்கு மிகப்பெரிய க்ரஷ் இருப்பதாகவும் அவரது அலைபேசி எண் இருந்தும் அவருக்கு அழைக்க தனக்கு தைரியம் இல்லை என நடிகர் குல்ஷன் தேவையா தெரிவித்துள்ளார். ஷைதான், ஹண்டர், ஹேட் ஸ்டோரி ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்த கோஸ்ட் ஸ்டோரீஸிலும் நடித்திருக்கிறார். மேலும் படிக்க



  • வசூலை அள்ள தனுஷ் போட்ட பிளான்.. வெளிநாட்டில் கேப்டன் மில்லர் ஆடியோ லாஞ்ச்..? 


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க, ன்னட நடிகர் சிவராஜ் குமார்,  சந்தீப் கிஷன், ஜான் கொக்கென் , நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் இசைவெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க



  • கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரப் படம்: அனுராக் கஷ்யப் விமர்சனம்


தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.சுதிப்தோ சென் இயக்கத்தில்  இந்தியில் எடுக்கப்பட்ட படம் “தி கேரளா ஸ்டோரி”.  ரிலீசாகி ஒரு மாதத்தை நெருங்கியுள்ள இப்படம் தினம் தினம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.