Maamannan Audio Launch: ரசிகர்களே.. நாளை மறுநாள் மாமன்னன் இசை வெளியீட்டு விழா..! ரெடி ஆகுங்க..!

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

Maamannan Audio Launch:  மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் படம் 

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் “மாரி செல்வராஜ்”. அவரின் அடுத்தப்படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும்,  கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.  பிரதான கதாபாத்திரமாக வைகை புயல் வடிவேலு நடித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் தேனி ஈஸ்வர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் என அனைத்தும் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 

இதனிடையே உதயநிதியின் கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் வடிவேலு 'ராசாகண்ணு’ என்ற பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.  இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

நாளை மறுநாள் இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் (நாளை மறுநாள்) தேதி நடத்தப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடைசிப் படம் என்பதால் இதனை பிரமாண்டமாக நடத்த உதயநிதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் இப்போதே இசை வெளியீட்டு விழா மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி, கமல் இருவரும் பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒன்றாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

K.S Ravikumar Birthday: அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை..! மக்களை மகிழ வைத்த கமல் - கே.எஸ்.ரவிக்குமார் காம்போ..!

Continues below advertisement