'கிழக்கே போகும் ரயில்' நாயகன்... 80களின் பிரபல நடிகர்... சுதாகர் உடல்நிலை எப்படி இருக்கு? அவரே கொடுத்த விளக்கம்!


நடிகர் சுதாகர் தன் உடல்நிலை குறித்துப் பரவிய தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 80களில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கியவர் நடிகர் சுதாகர். இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் 1978ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர். நடிகை ராதிகாவுடன் அறிமுக நடிகராக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய சுதாகருக்கு முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் படிக்க


ஏ.ஆர். ரஹ்மான் க்யூட் நடனத்துடன் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடல்..! ஜிகு ஜிகு ரயில் பாடல் வெளியீடு!


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலான ஜிகு ஜிகு ரயில் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் கோலிவுட் தாண்டியும் கவனமீர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ளார் மாரி செல்வராஜ். அவரது இயக்கத்தில், உதயந்தி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் அடுத்தாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. மேலும் படிக்க


தி கேரளா ஸ்டோரி திரைப்பட இயக்குனர் சுதிப்டோ சென் மருத்துவமனையில் அனுமதி...


‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்ததே அவரது திடீர் உடல்நலக்குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அவர் மீண்டும் குணமடையும் வரை படத்தின் புரொமோஷன் பணிகள் அனைத்து நகரங்களிலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க


அட.. மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி.... ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் படம்


நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படம் வெளியாக உள்ளது. கோலிவுட்டில் தற்போது முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ‘மாநகரம். இப்படம் இந்தியில் மும்பைக்கார் எனும் பெயரில் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் படிக்க


விராட் கோலி போல் நடித்துக்காட்டிய அனுஷ்கா; என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் வீடியோ..


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா இடையிலான ஜாலியான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியாவின் மிகவும் பிரபலமான தம்பதியர்களில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கட்டாயம் முன்னிலை வகிப்பார்கள். கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் படிக்க


அட்ரா சக்க..! கிரிக்கெட்டின் தாதா சவுரவ் கங்குலிக்கு பயோபிக் ரெடி..! ஹீரோ, யாரு தெரியுமா?


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும், படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து, விருப்பத்தின் பேரில் கிரிக்கெட்டை தேர்வு செய்து, தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உருவெடுத்தவர் சவுரவ் கங்குலி. மேலும் படிக்க