Anushka imitating Virat: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா இடையிலான ஜாலியான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியாவின் மிகவும் பிரபலமான தம்பதியர்களில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கட்டாயம் முன்னிலை வகிப்பார்கள். கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வது மற்றும் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளிப்பது என தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் ஜோடிகளில் இவர்கள் மற்றவர்களுக்கு முன்னிலை. 


இந்நிலையில் இருவரும் இணைந்து நிகிழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்களுடனான கலந்துரையாடலில் நடிகை அனுஷ்கா சர்மா அவரது கணவர் விராட் கோலி கிரிக்கெட் விளையாடும்போது விக்கெட் விழுந்தால் எப்படி கொண்டாடுவார் என அனுஷ்கா ஷர்மா செய்து காட்டினார். இதனை எதிர்பார்க்காத விராட் கோலியும் அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். அதற்கு பின்னர் பேசிய, அனுஷ்கா, “விக்கெட் கைப்பற்றும்போது சில நேரங்களில் விராட் கொண்டாடுவதைப்போல் பந்து வீச்சாளர்கள் கொண்டாட மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 


இந்த நிகழ்வில் விராட் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் எது என கேட்டபோது, அவர் தனது கடைசி ஆட்டம் தான் என கூறினார். இதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரமாக கூச்சலிட, அதனைப் பார்த்து விராட் கோலி பெங்களூரு அணிக்கா இவ்வளவு ஆதரவு என்பதுபோல் கேட்டார். 


அதேபோல் அனுஷ்கா ஷர்மா தான் நடித்த படத்தில் இருந்து ஒரு சிறிய வசனத்தினை பேசிக் காட்ட, விராட் உடனடியாக அதன் மீதி வசனத்தினை பேசிக் காட்டி அசத்தினார். இதனை எதிர்பார்க்காத அனுஷ்கா விராட்டின் கரங்களில் முத்தமிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணி லீக் போட்டியுடன் வெளியேறியது. அப்போது விராட் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். அதன் பின்னர் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு, இந்த வீடியோவில் விராட் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் பாகுபலி படத்தில் வரும் ‘பண்டிகையை கொண்டாடுங்க” என்ற வசனத்தைப்போல் இந்த வீடியோவை இணையத்தில் பரப்புவதும், தங்களது சமூக ஊடக பக்கங்களில் ஸ்டோரியாக வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.