இசை புயலுடன் இணைந்த வைகை புயல்... 'மாமன்னன்' பர்ஸ்ட் சிங்கிள்... தேதியை அறிவித்த படக்குழு


பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதான கதாபாத்திரமாக வைகை புயல் வடிவேலு நடித்துள்ளார். மேலும் படிக்க


சல்மான்கான் படத்தை பின்னுக்கு தள்ளிய ' தி கேரளா ஸ்டோரி'... வசூலில் புதிய சாதனை...!


பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி அதா ஷர்மா, சித்தி இத்னானி,  தேவதர்ஷினி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் இப்படம் தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போதிய லாபம், கூட்டம் இல்லாததால் இப்படம் இனி திரையிடப்படாது என படம் வெளியாகி இரண்டே நாள்களில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. மேலும் படிக்க


‘புஷ்பா’ பட ஸ்ரீவள்ளியாக நான் இன்னும் நன்றாகப் பொருந்தியிருப்பேன்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்!


'புஷ்பா' படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் அவரை விட தான் இன்னும் நன்றாகப் பொருந்தியிருப்பேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  கோலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அவ்வளவாகப் பணியாற்றவில்லை. மேலும் படிக்க


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' .. எங்கள் மக்களின் வலி.." விஜய் சேதுபதி படத்தை பார்த்து கண்கலங்கிய சீமான்..!


புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. நடிகை மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், நடிகர் சின்னி ஜெயந்த், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா, நடிகைகள், கனிகா, ரித்திகா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க


 ‘இனி நான் சீதா இல்லை’...கவலையுடன் சீரியலில் இருந்து விலகும் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி


சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக பல ஆண்டுகள் ஒளிபரப்பான மெகா தொடர் ரோஜா. அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமானவர் அதன்  ஹீரோயின்  பிரியங்கா நல்கரி. அந்த சீரியல் முடிந்த பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய மெகா தொடரான சீதாராமன் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் படிக்க


90ஸ் கிட் வைப்...ஷூட்டிங்கில் ஜாலியாக பம்பரம் வீட்டு விளையாடிய ஹிப்ஹாப் ஆதி!


வீரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தானும் ஒரு 90ஸ் கிட் என்பதை நிரூபித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாக பம்பரம் விட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆதி. மேலும் ’ நீங்கள் ஒரு 90ஸ் கிட்டாக இருந்தால் தான் உங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று பம்பரம் விடுவது எப்படிப்பட்ட ஒரு வைப் என்று உங்களுக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க


 


Car loan Information:

Calculate Car Loan EMI