சார் ஷாட் ரெடி. ஆனால் படத்தின் ஹீரோ பம்பரம் விளையாடுவதில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார். யார் தெரியுமா  நம்ம ஹிப்ஹாப் ஆதிதான்.


வீரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தானும் ஒரு 90ஸ் கிட் என்பதை நிரூபித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாக பம்பரம் விட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆதி. மேலும் ’ நீங்கள் ஒரு 90ஸ் கிட்டாக இருந்தால் தான் உங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று பம்பரம் விடுவது எப்படிப்பட்ட ஒரு வைப் என்று உங்களுக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். உங்களுடைய பம்பரம் விடும் பார்ட்னரை யார் என்று டேக் செய்யுங்கள் என்று சும்மா இருந்த ரசிகர்களை கிளப்பி விட்டுள்ளார் ஆதி.


 






 


 


 


ஹிப்ஹாப் ஆதி தற்போது நடித்து வரும் படம் வீரன். இந்தப் படத்தை ஏ.ஆர்.கே சரவணன் இயக்குகிறார். வினய் ராய், காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியவர்கள் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார்கள். அண்மையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. தண்டர்காரண் மற்றும் பப்பர மிட்டாய் . ஆதிரா ராஜ் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.கே சரவணன் இதற்கு முன்னதாக மரகத நாணயம் படத்தை இயக்கி உள்ளார். வீரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது ஜூன் 2 ஆம் தேதி வீரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


ஹிப்ஹாப் ஆதி ‘மீசையை  முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார்.  இந்தப் படம் ஆதியின் சொந்த வாழ்க்கையை ஓரளவிற்கு கற்பனை கலந்து எடுக்கப்பட்டது. மீசையை முறுக்கு  திரைப்படம் ரசிகர்களின் பல்ஸை மிகச் சரியாக கணித்தத் திரைப்படம் என்றே சொல்லலாம். ஹிப்ஹாப் ஆதியின் திறமைகளில் முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் ரசிகர்களுக்கு எப்போது என்ன வேண்டும் என்று மிகச்சரியாக தெரிந்து வைத்திருப்பவர். முதல் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் எடுத்தப் படம் நட்பே துணை இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது. அதைவிட முக்கியம் வேங்கை மவன் பாடல் தான். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அன்பறிவு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. தற்போது ’வீரன்’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.