'புஷ்பா' படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் அவரை விட தான் இன்னும் நன்றாகப் பொருந்தியிருப்பேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


கோலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.


ஸ்ரீவள்ளி கதாபாத்திரம்


ஆனால் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அவ்வளவாகப் பணியாற்றாத நிலையில், தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ள தன் ஃபர்ஹானா படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொண்டு முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனியார் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.


அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படம் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியுள்ளது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.


“எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை.


புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருந்தார்.  ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன்" எனத் தன் நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


ஃபர்ஹானா திரைப்படம்


நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் கடந்த  மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த நிலையில், முன்னதாக இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. 


இப்படத்துக்கு பாசிட்டாவ்வான விமர்சனங்கள் எழுந்துள்ள போதும், தி கேரளா ஸ்டோரி, புர்கா படங்களின் வரிசையில் இந்தப் படத்துக்கும் எதிர்ப்புகள் ஒருபுறம் கிளம்பிவந்தன. இந்நிலையில் முன்னதாக சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஃபர்ஹானா படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், எளிய பின்னணியைக் கொண்ட பெண்ணின் வாழ்வியல் தான் பதிவு செய்யப்பட்டுள்ள்து என்றும் எஸ்டிபிஐ கட்சி முன்னதாகத் தெரிவித்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!