உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டில் நடைபெற்று வரும் போருக்கு கூடுதல் இராணுவ ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக, திடீர் சந்திப்பாக இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக்கை இங்கிலாந்தில் சந்தித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரைன் கோரிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக இங்கிலாந்து கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தது.


ஜெலன்ஸ்கி டுவீட்


"தரையிலும் வான்வெளியிலும் நமது திறன்களை விரிவுபடுத்த உதவுவதில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது. இந்த ஒத்துழைப்பு இன்றும் தொடரும். நான் எனது நண்பர் ரிஷியை சந்திக்க உள்ளேன். நாங்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளோம்" என்று ஜெலன்ஸ்கி லண்டனில் இறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக, ஜெலன்ஸ்கி பல மேற்கத்தியத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரி வருகிறார். ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான தாக்குதலுக்கு தனது நாட்டை தயார் படுத்தி வருகிறார்.






உக்ரைனுக்கு முழு ஆதரவு


திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை சுனக் வலியுறுத்துவார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.  "புதினின் ஆக்கிரமிப்புப் போரின் பெரும் புள்ளி உக்ரைனில் இருக்கலாம், ஆனால் அவர் செய்த தவறின் கோடுகள் உலகம் முழுவதும் நீண்டுள்ளன. உக்ரைன் வெற்றிபெறுவதை உறுதிசெய்வது எங்கள் விருப்பம். மேலும் புதினின் காட்டுமிராண்டித்தனத்திற்கு வெகுமதி அளிக்கப்படாது எனந்து உறுதி," என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Thalapathy 68: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்..? 20 ஆண்டுகளுக்கு பிறகு தளபதியுடன் இணையும் யுவன்..? ரசிகர்கள் ஆர்வம்..!


பல நாடுகளின் ஆதரவு கோரும் ஜெலன்ஸ்கி 


உக்ரைனின் இராணுவ மற்றும் மனிதாபிமான தேவைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை சந்தித்த ஜெலென்ஸ்கியின் பாரிஸ் பயணத்திற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு சுனக்கை சந்தித்துள்ளார். உக்ரைனின் இராணுவத்திற்காக டஜன் கணக்கான இலகுரக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டதுடன், அவற்றைப் பயன்படுத்தும் வீரர்களுக்கு பயிற்சியும் அளித்தது.






பிரான்ஸ் நாடு ஆதரவு


"வரவிருக்கும் வாரங்களில், AMX-10RC உட்பட பல்லாயிரக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் இலகுரக டாங்கிகள் கொண்ட பல பட்டாலியன்களுக்கு பிரான்ஸ் பயிற்சி அளிக்கிறது" என்று அவர்களின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக அதன் மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைனின் வான் பாதுகாப்பு திறன்களை ஆதரிப்பதில் பாரிஸ் அதன் முயற்சிகளிலும் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. பாரிஸில் தரையிறங்குவதற்கு ஒரு நாள் முன்பு, ஜெலென்ஸ்கி ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸையும் சந்தித்தார், அவர் €2.7bn ($2.9bn) மதிப்புள்ள ஆயுதங்களைத் தருவதாக உறுதியளித்தார்.